Skip to main content

அச்சுறுத்தும் கொரோனா-இத்தாலியிலிருந்து இன்று வந்த 55 தமிழர்கள் யார்...?

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக, கடந்த மாதம் 29ம் தேதி இத்தாலியிருந்து சொந்த ஊரான கேரளமாநிலம் பத்தினம் திட்டாவிற்கு வந்தவர்களால் 22 நபர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு கேரளாவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 218 நபர்களில் 55 நபர்கள் தமிழர்கள் என அறியவர ஹை அலர்ட்டில் தயார் நிலையில் இருக்கின்றது தமிழ்நாடு சுகாதாரத்துறை.

தற்பொழுது உலகமெங்கும் திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் தான்.! அந்த மரண ஓலத்திற்குக் காரணமான கொரோனா வைரஸ் (2019-nCoV ) விலங்கில் இருந்த வைரஸ் மூலம் மனிதனுக்கு பரவியதாகவும், தொடக்கத்தில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டதாகவும் அறியப்பட்டு, மனிதர்களை மெல்ல மெல்ல கொல்ல ஆரம்பித்தது. முதலில் சீனாவில் தொடங்கிய மரணம் இன்று உலகளவில் பரவி மிகப்பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்த, பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதனை தேசியப்பேரிடராகவே பிரகடனப்படுத்தியது. அத்தகைய நாடுகளில் இந்தியாவும் விலக்கல்ல..!! கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் பட்டியலில் இந்தியாவினைப் பொறுத்தவரை ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆக்ரா, காசியாபாத், கேரளா, டெல்லி, தெலுங்கானா, ஹரியானா, லடாக் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் அடக்கம் எனினும், இத்தகைய பாதிப்புகளுக்குக் காரணம் முன்னோடியாக கைக்காட்டுவது கேரள மாநிலம் பத்தினம் திட்டாப் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தாரையே.!!

 

 Who are the 55 Tamils ​​who came today from the threatening Corona-Italy?


பணி நிமித்தமாக இத்தாலியில் வசிக்கும் பத்தினம் திட்டாவினை சேர்ந்த குடும்பத்தார் இத்தாலி வெனிஸ் நகரிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 29ந் தேதி கேரளா வந்திறங்கினர். தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இத்தாலி திரும்பிய நிலையில், உறவினர்கள் பலருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டிருக்கின்றது. விசாரணை மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் இத்தாலி உறவினர்களால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு சிகிச்சையளித்த நிலையில், கேரளாவில் மட்டும் 22 நபர்கள் பாதிக்கப்பட்டதும், அவர்களுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததையும் பகிரிந்து கொண்டார் கேரளா சுகாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, அதே வேளையில், கேரளாவில் மட்டும் 5191 நபர்கள் அவர்களது வீடுகளிலும் 277 நபர்கள் மருத்துவமனைகளிலும் இருக்க, மொத்தமாக 5468 நபர்கள் கண்காணிக்கப்பட்டது. இதில் 1715 நபர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியிருந்த நிலையில் 1132 ரத்தப் பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், மீதமுள்ளோர் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை கேரள அரசு. எனினும், அதே வேளையில், கொரோனா வைரஸ் பாதித்துள்ள நபர்கள் சென்ற இடங்கள,  கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் என இவர்களிடம் பழகியவர்களை கண்டுபிடிக்கும் தீவிர பணிகளில் அனைத்து துறைகளும் முடுக்கிவிட்டுள்ளது கேரள அரசாங்கம்.

 

 Who are the 55 Tamils ​​who came today from the threatening Corona-Italy?


 

இது இப்படியிருக்க, உலக முழுவதுமுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய அரசு இன்று ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து, 218 நபர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதில் 211 பேர் மாணவர்கள் என இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 218 பேரும் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இன்று காலை ஈரானில் இருந்து விமானப்படை விமானம் மூலம் 234 பேர் மும்பை வந்து சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தாலியிலிருந்து இன்று வருகை புரிந்த 218 நபர்களில் 55 நபர்கள் தமிழர்கள் எனவும், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள், குறிப்பாக மத்திய மாவட்டப்பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாக தீவிர கண்காணிப்பினை முடிக்கிவிட்டு தயார் நிலையில் இருக்கின்றது தமிழ்நாடு அரசு.