Skip to main content

அபிநந்தன் இனி சந்திக்கவிருக்கும் சோதனைகள்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
abinandhan


பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன், நேற்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
 

வாகா எல்லையை அபிநந்தன் தாண்டிய பின், வான்படை துணை மார்ஷியல் ஆர்ஜிகே கபூர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “விங் கமாண்டர் அபிநந்தன் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். விமானப்படையின் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் படி முதலில் அபிநந்தனை பூரண மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அழைத்து செல்கிறோம். வானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தில் இருந்து வெளியேறியவருக்கு இது கட்டாயமானது. விமானத்திலிருந்து வெளியேறியதால் அவரது உடலுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும்” என்றார்.
 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அபிநந்தன் மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்றபோது, பாக் போர் விமானம் எஃப்-16 மீது மோதியதால், அது பழுதடைந்தது. இதனால் வானில் பயணிக்கும்போதே பாராசூட்டை பயன்படுத்தி கீழ் இறங்கிவிட்டார் அபிநந்தன். பாக் எல்லைக்குள் அவர் விழுந்துவிட்டதால், பாக் ராணுவம் அவரை பிடித்தது.
 

தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவர் எப்போது சாதாரணமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவார். என்ன மாதிரியான நெறிமுறைகளை அவர் சந்திக்க நெறிடும் என்பது குறித்து முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் சிலர் ஆங்கில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் பார்ப்போம்.
 

மானோஜ் ஜோஷி என்னும் மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி அளித்த பேட்டியில், போர் கைதிகள் முகாமுக்கு சென்று வந்தவர்களிடம் மூன்று வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அது என்ன என்றால்.
 

  • பாகிஸ்தானிடம் எதேனும் முக்கியமான விஷயத்தை பற்றி பகிர்ந்தாரா என்று அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும்.
     
  • பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவரை மூளை சலவை செய்திருக்கிறார்களா என்று புலனாய்வு அமைப்பினரை வைத்து கேள்விகள் கேட்கப்படலாம்.
     
  • அவர் உடம்பில் எங்காவது பக் பொறுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். மயக்க நிலையில் அவர் இருந்தபோது என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம் என்று ஜோஷி தெரிவிக்கிறார்.
     
  • உடல் வலிமை சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
     

“விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் தங்களின் வீரர்களை ரா போன்ற புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்து கேள்விகள் கேட்பதில்லை. ஆனால், அபிநந்தன் கேஸ் முற்றிலும் வேறுபட்டது என்பதால் ரா போன்ற அமைப்பால்தான் விசாரிக்கப்படுவார். இந்தியாவின் பாதுகாப்பிற்காக அபிநந்தன் என்னும் தைரியமானவர் போராடி, அவர்களிடம் சிக்கிக்கொண்டார். இது கொஞ்சம் மோசமான ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது அவரை விசாரிக்க வேண்டும் அது கட்டாயமானது” என்று முன்னாள் லியுடெனண்ட் ஜெனரல் ஹெச்.எஸ் பாசங் ஒரு ஆங்கில பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.