
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள், அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே போன்று ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளையும் இரவு நேரங்களில் அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இயக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு ஒலி வெளியிடும் பட்டாசுகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலங்களில் வெடிக்கக் கூடாது.
மேலும், ஒலி மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.