Skip to main content

நித்தி பாணியில் ஜக்கியுடன் வேலுமணி உருவாக்கும் தீவு தேசம்!    

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

Velumani-making island nation with Jackie in Nithiyanatha style

 

முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒயிலாட்டம் ஆடுவதில் சிறந்தவர். அவர் உடலை வளைத்து ஒயிலாட்டம் ஆடும் பாங்கு, நடனத்தில் சிறந்த பெண்களையே நாண வைத்துவிடும். அவர் ஒயிலாட்டத்தில் மட்டுமல்ல, ஊழல் ஆட்டத்திலும் மிக நளினமாக ஆடியிருக்கிறார் என்கிறார்கள் இரண்டாவது முறையாக அவரது வீட்டை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.

 

அ.தி.மு.க.வின் ஊழல் வரலாற்றிலேயே டி.டி.வி. தினகரன், லண்டன் மாநகரில் கோல்ப் மைதானத்துடன் ஒரு பெரிய ஹோட்டலை வாங்கியதுதான் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. 91-96-இல் லண்டன் ஓட்டல் வழக்கு எனப் பெயரிடப்பட்ட அந்த வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெ.வுக்கு எதிராக சேர்க்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இன்றுவரை அந்த வழக்கு முடியவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் மூலம் அந்த ஓட்டலை தினகரன் வாங்கியிருந்தார். அதேபாணியில் நித்யானந்தா ஸ்டைலில் ஒரு சிறு தீவையே மாலத்தீவுக்கு பக்கத்தில் இந்தியப் பெருங்கடலில் வாங்கியிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

 

வேலுமணிக்கு விமானம் என்றால் ரொம்பப் பிடிக்கும். டெல்லிக்கு கப்பம் கட்டுவதாக இருந்தால்கூட ஸ்பெஷல் சார்ட்டர்டு விமானத்தில்தான் பணத்தைக் கொண்டு செல்வார். குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது, ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதல்படி சென்னையிலிருந்து சிறப்பு விமானங்கள் வேலுமணியின் மகன் விகாஸ் வேலுமணி உடனிருக்க பறந்தது. அவையெல்லாம் பண கார்கோ விமானங்கள். அவை பெங்களூருவுக்கும் அகமதாபாத்துக்கும் பறந்து பணத்தை டெலிவரி செய்தன. அவ்வப்போது வேலுமணி ஒரிஸாவிலுள்ள தரணி எர்த் மூவர்ஸ் என்கிற தனது சாதியைச் சேர்ந்தவர்களின் தனி விமானத்தை டெல்லிக்கு அனுப்பிவைப்பார்.

 

Velumani-making island nation with Jackie in Nithiyanatha style

 

அப்படித்தான் வேலுமணியின் மகன் விகாஸ், கரோனா காலத்தில் அடிக்கடி தனி விமானத்தில் பறந்திருக்கிறார். அவர் நேராக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். மகன் புடைசூழ மொசாம்பிக் என்கிற ஆப்பிரிக்க நாட்டில் நிலாஹி சுரங்கத்தை வாங்கச் சென்றார். அதில் ஒரு பயணத்தை நேர்மையான மத்திய அமலாக்கத்துறை அதிகாரி கண்டுபிடித்துவிட்டார். அந்தப் பிரச்சனை பிரதமர் மோடி அளவிற்குச் சென்றது. அதைச் சமாளிக்க ஓ.பி.எஸ். போய் மோடியை சந்தித்துப் பேசினார்.

 

இப்படி ஐந்து வருடத்தில் சுமார் 4 மாத காலம் விமானத்தில் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார் விகாஸ் வேலுமணி. விகாசுடன் வேலுமணியின் மனைவி, மகள் மற்றும் வேலுமணியும் பறந்திருக்கிறார்கள்.

 

உலக நாடுகளில் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் இந்தக் குழு பறந்திருக்கிறது. இவர்களது டூர் புரோகிராமில் தவறாமல் இடம்பெற்ற நாடு மாலத்தீவு. மாலத்தீவுக்கு இந்தியாவிலிருந்து இவர்கள் செல்லவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போய் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஒரு இடத்தை அடைந்து, மறுபடியும் ஆஸ்திரேலியாவுக்கு வந்து மாலத்தீவுக்கு பறந்திருக்கிறார்கள்.

 

Velumani-making island nation with Jackie in Nithiyanatha style

 

இந்த ஆஸ்திரேலியா, மாலத்தீவு ட்ரிப்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை விளைவித்திருக்கிறது. அமைச்சர் தங்கமணியும் வேலுமணியும் கிரிப்டோ கரன்ஸியில் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிப்படையாக லட்சக்கணக்கில் என கணக்கு வந்தாலும் கிரிப்டோ கரன்ஸிகளில் கறுப்புப் பக்கம் என ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது கடினம். கோடிக்கணக்கில் வரும் முதலீடுகளை கூட லட்சக்கணக்கில் என்றுதான் கிரிப்டோ கரன்ஸி கணக்குகள் சொல்லும். அதைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.


அமைச்சர் தங்கமணியும் வேலுமணியும் இணைந்து நித்யானந்தா ஸ்டைலில் ஒரு தீவை வாங்கி, அங்கு சாமியார் ஜக்கி வாசுதேவை வைத்து ஒரு குட்டி இந்து தேசத்தை உருவாக்கத் திட்டமிட்டார்கள் என்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள்.


வேலுமணி மகன் விகாஸ் வேலுமணி, ஆஸ்திரேலியாவில் இருந்து குட்டி ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் பறக்கிறார் என முதலில் செய்தி வெளியிட்டது நக்கீரன்தான். அப்பொழுது நமக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார் வேலுமணி. சாதாரண மில் தொழிலாளியின் மகனான வேலுமணியின் மகன், ஆஸ்திரேலியாவில் தனி விமானங்களில் எப்படிப் பறக்கிறார் என நக்கீரன் எழுப்பிய கேள்வி தன்னை தனிப்பட்ட முறையில் பாதித்ததாக வேலுமணி நமக்கு அனுப்பிய நோட்டீஸ்களில் கூறியிருந்தார். அன்று நக்கீரன் எழுப்பிய கேள்விகளை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணியை நோக்கி கேட்க, எனது வழக்கறிஞர்கள் ஆடிட்டர்கள் மூலம் பதில் சொல்கிறேன் என விழி பிதுங்கி பதில் சொல்லியிருக்கிறார் வேலுமணி என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.


வேலுமணி, நெதர்லாந்தில் இருக்கும் அவரது சகோதரர் செந்தில், கோவையில் இருக்கும் சகோதரர் அன்பரசன், ஆரம்ப காலத்தில் அவரது காண்ட்ராக்ட் சந்திரசேகர், சந்திரபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் நடத்திய கம்பெனிகளின் பேரில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கடன் வாங்கியுள்ளார். கோடிக் கணக்கில் வரும் இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தவேயில்லை. துபாய் போன்ற சர்வதேச நாடுகளில் இயங்கும் அன்பரசனுக்குச் சொந்தமான மகா கணபதி ஜூவல்லர்ஸில் மட்டும் இப்படி 290 கோடி ரூபாய் வந்திருக்கிறது. ஜூவல்லரி உள்ளிட்ட 13 கம்பெனிகள் வெளி மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் முதலீடு செய்திருக்கின்றன என்கிறது வேலுமணி மீது போடப்பட்ட எஃப்.ஐஆர். அதையொட்டி வேலுமணியே எதிர்பார்க்காத வகையில் வேலுமணிக்கு வேண்டப்பட்ட மலர்விழி, ஏ.டி.எஸ்.பி. அனிதா, பத்திரிகையாளர்கள் மேல் வேலுமணி சொன்னதற்காக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த ஆய்வாளர் லோகநாதன், திருப்பூர் ஆய்வாளர் சந்திரகாந்தா என 60-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.


ஏழு மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்த ரெய்டுகளின் தொடர்ச்சியாக மாலத் தீவு உட்பட வேலுமணியின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட இரண்டு வழக்குகளோடு மூன்றாவது வழக்கும் வருகிறது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.

Next Story

பாஜக போட்ட பிளான்; கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய வேலுமணி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 Velumani AIADMK BJP alliance  issue
கோப்புப்படம்

"ஹலோ தலைவரே, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் நினைவிடத் திறப்புவிழா, தி.மு.க. தொண்டர்களின் மகிழ்ச்சிக்கு மத்தியில் நெகிழ்வோடு நடந்திருக்கு.” "ஆமாம்பா, இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் பேதம் பார்க்காமல் வந்து கலந்துக்கணும்னு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸே இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிச்சிடுச்சே?”

"உண்மைதாங்க தலைவரே, இந்த நினைவிடத் திறப்பு விழாவிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் அழைத்திருந்தார். அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் தி.மு.க.வை எதிரிக்கட்சியாகவே பார்ப்பதால், அக்கட்சிகளின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதில் யாருக்கும் எந்தவித ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மட்டும் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டது.” 

“காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பியும் அவர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்களே?"ஆமாங்க தலைவரே, இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி, கட்சியின் முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள் எனப் பலரும் கலந்துகொள்ள விருப்பமாக இருந்தனர். ஆனால், விழாவுக்கு முதல் நாள், முன்னாள் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு டெல்லியில் இருந்து போன் வந்ததாம். அப்போது, நினைவிடத் திறப்பு விழாவுக்கு நம் கட்சியில் இருந்து யாரும் போகத் தேவையில்லை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு இங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது கட்சி மேலிடத்தின் உத்தரவு என்பதால் அவர்களால் இதை மீற முடியவில்லையாம். இருந்தும் முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் மட்டும் தலைமையின் உத்தரவை மீறி முதல்வர் ஸ்டாலினுக்கு மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் சீட்டுகளை ஒதுக்காததால், தங்களின் அதிருப்தியை அக்கட்சியின் டெல்லி தலைமை இப்படி வெளிப்படுத்தியதாம். இது தி.மு.க. தரப்பிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.”

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தோடு, பா.ஜ.க. சில ரகசிய மூவ்களை நடத்தியிருக்குதே?” "ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒரு மெஹா ரகசியத் திட்டத்தை கையில் எடுத்து பா.ஜ.க. தரப்பு, அதில் பெரும் தோல்வியைக் கண்டிருக்கிறது என்கிறார்கள். அதாவது, மாஜி மந்திரி வேலுமணி மூலம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்களைப் பிரித்து, அவர்களை தமிழகம் வந்த பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு ரகசிய ஏற்பாடுகள் நடந்தன. அந்த மேடையில் வேலுமணி பேசுவதற்கும் திட்டம் தயாரானது. இதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மந்திரி செந்தில் பாலாஜியை, அவர் வழக்கில் சாதகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அவர் மூலம் மேற்கு மண்டல தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பலரையும் தங்கள் வசப்படுத்தி, தி.மு.க. ஆட்சிக்கு செக் வைப்பதற்கான ரகசியத் திட்டங்களையும் பா.ஜ.க. வகுத்ததாம். இதற்கான பல்வேறு ஏற்பாடுகளும் நடந்தன.'' 

"இந்தத் திட்டம் எங்கே புட்டுக்கிச்சு?" இந்த முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், கடைசி நேரத்தில் வேலுமணி ’அவ்வளவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் முயற்சி முழுமையாகப் பலிக்கவில்லை’ என்று, டெல்லிக்கு ரெட் சிக்னல் கொடுத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டாராம். இதேபோல் தி.மு.க. செந்தில் பாலாஜி தரப்பில் இருந்தும் இணக்கமான பதில் வரவில்லையாம். இதனால் அப்செட்டான பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, இந்த முயற்சியை ஒத்திப் போடுங்கள் என்று சொல்லிவிட்டதாம். தங்கள் முயற்சி பலிக்கும் என்ற நம்பிக்கையில் தான், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மோடி வரும்போது நடப்பதைப் பாருங்கள் என்று சஸ்பென்ஸாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். இந்த முயற்சி வெற்றிபெறும்னு மோடியும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் அவருக்கும் ஏமாற்றம் என்கிறார்கள்.'' 

மோடியின் பல்லடம் கூட்டத்துக்கு அவர் எதிர்பார்த்த கூட்டமும் வரவில்லை என்கிறார்களே?'' "பா.ஜ.க.வின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு நாள் கூட்டம் பல்லடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி கலந்துக்கிட்ட அந்தக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 15 லட்சம் பேருக்கு மேல் கலந்துக்குவாங்கன்னு அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. நாங்களே 5 லட்சம் பேரை தயார் பண்ணிட்டோம்னு அதன் நிர்வாகிகளும் உதார்விட்டுக்கிட்டிருந்தாங்க. இருந்தும் அந்தக் கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் போடப்பட்டதே வெறும் 80 ஆயிரம் இருக்கைகள்தானாம். இதை நிரப்பவே கட்சி நிர்வாகிகளுக்கு தாவு தீர்ந்துபோயிடுச்சாம். கோவை பகுதியில் இருந்து வடமாநில கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து நிறைய உட்கார வைத்துவிட்டார்களாம். கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட கோவை மாவட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர் தொழிலதிபர்கள் சைடில் இருந்து ஏறத்தாழ 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறாராம். இது இல்லாமலும் வசூல் ஏகத்துக்கும் நடந்திருக்கு. லாட்டரி அதிபர் மார்ட்டின் தரப்பிலிருந்து மட்டும் 5 கோடி ரூபாய் தரப்பட்டதாக செய்தி அடிபடுகிறது.''

"இந்தப் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே?"ஆமாங்க தலைவரே, பல்லடம் கூட்டத்தில் மோடி பேசும்போது, நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். இப்போது வரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராகப் புகழ்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டின் மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார் என்றெல்லாம், அவர்கள் இருவர் மீதும் திடீர் பாசம் கொண்டு மாறி மாறி புகழ்ந்து தள்ளினார். இதற்கெல்லாம் காரணம், இப்போதும் அவர் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார் என்றும், அதைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பேச்சின் மூலம் அ.தி.மு.க.வினரின் அனுதாபத்தையும் பெறமுடியும் என்று மோடி கனவு காண்பதாக அ.தி.மு.க. தரப்பு கிண்டலடிக்கிறது.''

"அதே நேரம் தி.மு.க. மீது கசப்பையும் கக்கிவிட்டுப் போயிருக்கிறாரே மோடி?” "ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்த மோடி, எந்த இடத்திலும் தி.மு.க.வினரையோ, தி.மு.க. அரசையோ பாராட்டி விடக்கூடாது என்பதில் இந்த முறை ரொம்பவே கவனமாக இருந்தாராம். குறிப்பாக தூத்துக்குடி குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளத்தைக் கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடியவர் தி.மு.க. எம்.பி.யான கனிமொழி. இந்த ராக்கெட் தளத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, அங்கே வந்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் பெயரையெல்லாம் சொல்லிவிட்டு, கனிமொழி பெயரை கவனமாகத் தவிர்த்துவிட்டார். அதேபோல் விழா அழைப்பிதழில் பெயர் இருந்தும், தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் பெயரையும் மோடி சொல்லவில்லை. இது ஒருபுறம் இருக்க, அன்று அதே நெல்லையில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இனிமேல் தி.மு.க.வை பார்க்க முடியாது. எனென்றால் அது இருக்காது. குடும்பத்திற்காகவும் வாரிசுகளுக்காகவும் அரசியல் செய்யும் தி.மு.க.வை இனிமேல் நீங்கள் தேடினாலும் கிடைக்காது என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டும் போயிருக்கிறார்.''

"நடிகர் சத்யராஜ் பொண்ணுகிட்ட பா.ஜ.க. தலைமை மூக்குடைபட்டிருக்காமே?'' "ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்' யாத்திரை முடிந்த பின்னும் பா.ஜ.க. தலைமை எதிர்பார்த்த ரிசல்ட் இல்லாததால் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க, கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி, திரைப்பட பிரபலங்கள், இளைய தலைமுறையினரை பா.ஜ.க.வுக்குள் இழுக்கும்படி தலைமையிலிருந்து உத்தரவு வந்ததாம். ஏற்கெனவே நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவதோடு, அரசியலுக்கு வர விருப்பமுள்ளதாகவும் பேட்டியளித்திருந்தார். எனவே அவரை இழுத்துவிடலாமென்ற எண்ணத்தோடு அவரது இல்லத்துக்கே சென்ற பா.ஜ.க.வினர், கட்சியில் சேருமாறும், அப்படி சேர்ந்தால் அவர் கேட்கும் தொகுதியைக் கொடுப்பதாகவும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, "நான் பெரியாரின் பேத்தி. சாதி, மதத்தை தூக்கிப் பிடிக்கும் எந்தக் கட்சியிலும் நான் இணைவதாக இல்லை. பதவிக்காகவும் கட்சிகளில் இணையப் போவதில்லை” என்று அதிரடியாகக் கூறி திருப்பியனுப்பிவிட்டாராம்.

"தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தி.மு.க.வின் மா.செ.க்கள் இருவர் மாற்றப்பட்டிருக்கிறார்களே?” "சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான இளைய அருணா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். காரணம், சென்னை பகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களான ஆர்.கே. நகர் எபினேசர், ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் ஆர்.டி. சேகர் ஆகியோருக்கும் இளைய அருணாவுக்கும் ஒத்துப் போகவில்லையாம். எனவே இவர்கள், அவர் மீது புகார்களை எழுப்பி வந்தனர். இந்த விவகாரம் உதயநிதி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வெடித்ததால், தேர்தல் நேரத்தில் எதற்கு சிக்கல் என்று இளைய அருணாவை தூக்கிவிட்டதாம் அறிவாலயம். அவருக்கு பதில் பெரம்பூர் எம்.எல்.ஏ. சேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். களப்பணியில் வேகம் காட்டிவரும் எபினேசருக்கு மா.செ. பதவி கிடைக்காதது இளைஞரணிக்கு வருத்தமாம். ஆனால் உடல்நலப் பிரச்சினையுள்ள சேகரால் தேர்தல் பணிகளை எப்படிப் பார்க்க முடியும்? என எபினேசர் தரப்பினர் சரவெடிகளைப் போட்டு வருகிறார்கள். இதேபோல் பெரம்பலூர் தி.மு.க. மா.செ. குன்னம் ராஜேந்திரன், பொறுப்பில் இருந்து விலகியதால், வீ. ஜெகதீசனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்திருக்கிறது அறிவாலயம்.”

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கிறேன். வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்த்தில் இருந்த இவரது பவரைக் குறைத்து, தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக மாற்றியிருக்கிறார்கள். காரணம், வீட்டு வசதித்துறையுடன் கூடிய சி.எம்.டி.ஏ.வை கவனித்து வரும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் சமயமூர்த்திக்கும் ஒத்துப்போகவில்லையாம். இவரது அதிரடி மாற்றம் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.''