தமிழத்தில் மக்களவை தேர்தலுடன் , 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைப்பெற்றது.
இதில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் மத்தியில் மீண்டும் பாஜக கட்சி ஆட்சி அமைக்கும் எனவும், ஆனால் தமிழகத்தில் திமுக அதிக இடங்களையும், அதிமுக கூட்டணி குறைந்த இடங்கள் கைப்பற்றும் என இந்தியா டுடே, டைம்ஸ் நவ், நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை யார் பிடிப்பார் என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக 'இந்தியா டுடே' செய்தி நிறுவனம் நேற்று 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான கருத்துக்கு கணிப்பு முடிவுகளை வெளியிட்டது.
அதில் அதிமுக கூட்டணி- 3 இடங்களையும், திமுக கூட்டணி-14 இடங்களையும், மீதமுள்ள 5 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கட்சியினரிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் தாக்கம் கட்சியின் தலைவர்களிடையே எதிரொலித்தது. தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு நடைப்பெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை பார்க்கலாம்.
அதிமுக கட்சிக்கு- 113 உறுப்பினர்கள்.
திமுக கட்சிக்கு- 88 உறுப்பினர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு- 8 உறுப்பினர்கள்.
இந்தியன் முஸ்லீம் லீக்- 1 உறுப்பினர்கள்.
தமிழக சபாநாயகர்-1 .
சுயேட்சை உறுப்பினர்-1.
நியமன உறுப்பினர்-1.
மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை- 213.
தேர்தல் நடைப்பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை-22
தமிழக்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை-235.
இதில் நியமன உறுப்பினர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் அதிகாரம் பெறவில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். ஆனால் அதிமுக கூட்டணி மற்றும் சபாநாயகருடன் சேர்த்தால் -114 சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக கூட்டணிக்கு-97 உறுப்பினர்களும், அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (சுயேச்சை உறுப்பினர்) ஆக உள்ளார். அதிமுக கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்டவை கணக்கில் கொண்டால் அதிமுகவிற்கு மேலும் சட்டப்பேரவையில் பலம் குறையும். இந்த 'இந்திய டுடே' கருத்துக் கணிப்பில் ஐந்து சட்டமன்ற தொகுதி இழுபறி நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதில் அமமுக மூன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் எனில் அமமுக கட்சி தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகப்பெரிய கட்சியாக மாறும். அதிமுக மற்றும் திமுக இருகட்சிகளுக்கு கடுமையான போட்டியாக டிடிவி தினகரன் திகழ்வார். அந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் திமுக மற்றும் அதிமுகவிடம் அமைச்சர் அல்லது முதல்வர் பதவியை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கர்நாடகாவை போல் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுமா? என்பதை நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மூலம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.