தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான திவ்யா துரைசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்.
அப்போது அவர் கூறியதாவது, "பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அடிக்கடி திறந்து பார்க்க மாட்டேன். கடைசியாக, நடிகை நயன்தாராவின் பாப்பாவைப் பார்ப்பதற்காக, விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து பார்த்தேன். பொதுமக்கள் நிறைய பேர், அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கமண்ட் செய்கிறார்கள். அது தேவையே கிடையாது. அவங்களுடைய வாழ்க்கை, அவர்களுக்கு தெரியாதா, அவர்களின் குழந்தையை எப்படி, இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று. கமண்ட் செய்ய நாம யாரு.
சூர்யா சார் பற்றி பேசினால், என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது. காலை 06.30 மணிக்கு ஷூட் ஆரம்பிக்கிறது என்றால், சூரியன் மறையும் வரை ஷூட் நடக்கும். நாங்கள் எல்லாரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம். சூர்யா சார் ஷூட் முடிந்து, 10 நிமிடங்களில் ரூமுக்கு சென்று ரெப்ரஷ் ஆகிட்டு, பின்னர் மாடிக்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார். சூர்யா பிறந்தநாள் அன்று காலை, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, ஜெய் பீம், சூரரைப் போற்று வரிசையில் எதற்கும் துணிந்தவன் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தேன்.
இன்னும் போகணும். போவதற்கு நிறைய இருக்கிறது; என்ன பண்ணிட்டோம் என்றார் சூர்யா. அவர் பெரிய நடிகர், அவர் சொல்ல வேண்டுமென்றே இல்லை. அப்போது, அவருக்கு உள்ளே எவ்வளவு தேடல் இருக்கிறது. ஏற்கனவே, அவர் பெரிய நடிகர், அவருக்கு இன்னும் முன்னாடி போக வேண்டும் என்ற எண்ணம், மிகவும் உத்வேகப்படுத்தக் கூடிய விஷயம். இது எப்போதும் என் நினைவில் வரும். சூர்யா சார் பிறந்த நாளுக்கு ஜோதிகா வந்திருந்த போது, சூர்யாவைப் பார்த்துக்கிட்ட விதம், காலையில் இருந்து செட்டுக்கு வந்து, கூடவே இருந்து ஷூட்டுக்கு போகும் போது அவர்கள் அங்கேயே இருப்பார்கள். ரொம்ப ஸ்வீட்டாக பேசுவார்.
ஜோதிகா எல்லாரோடயும் அக்கறையாகப் பேசுவார். அவர் பெரிய நடிகை. அவர் அதைக் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொருவரையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்பார். உணவு அனைவருக்கும் பரிமாறினார். எங்களுக்கும் ஜோதிகா தான் உணவு பரிமாறினார். சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. சூர்யா பிறந்தநாள் அன்று காலை முதல் இரவு 12.00 மணி வரை எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அதை மறக்க முடியாது.
ஜெய் சூப்பரான நடிகர்; நன்றாக டயலாக் பேசிக் கொண்டிருப்பார்; பெஸ்ட் பர்ஃபார்மர். ஹரிஷ் கல்யாண் ரொம்ப சின்சியரான நபர். ஹரிஷ் கல்யாணுடன் அதிகமாக பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு இல்லை. நான் பார்த்த வரைக்கும் அவர் அதிகமாக பேச மாட்டார். சத்யராஜ் சார், இளவரசன் சார், இரண்டு பேரும் செட்டில் இருந்தாங்கன்னா எனக்கு செம்ம ஜாலி. இரண்டு பேரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், நாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அப்படி பேசுவார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.