Skip to main content

கூவத்தூர் ரகசிய வீடியோ! டீல் பேசிய எடப்பாடி!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
eps


 

ரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நாடார் சமூகம் வரிந்துகட்டி வருவதாக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியது மாநில உளவுத்துறை. இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் உயரதிகாரி களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி.


""முக்குலத்தோர் வாக்குகள் இனி சசிகலா-தினகரன் தரப்புக்குத்தான் போகும். அதனால் கருணாஸை கைது செய்வதால் அரசியல்ரீதியாக நமக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மாறாக, மாற்று சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் கருணாஸ் "டச்'சில் இருப்பதும் எடப்பாடியை சீண்டியது. ஆலோசனைக்குப் பின் சபாநாயகர் தனபாலுக்கு கைது தகவலை அனுப்பிய கையோடு, காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது'' என்றனர் கோட்டை அதிகாரிகள்.


கருணாஸ் தரப்பில் நாம் விசாரித்த போது, ""கடந்த ஒரு வருடமாகவே கரு ணாஸுக்கும் எடப்பாடிக்கும் மறைமுகமாக யுத்தம் நடந்துவருகிறது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையை அரசியல் ரீதியாக ஒடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் எடப்பாடி. கருணாஸின் திருவாடானை தொகுதி ராமநாதபுர மாவட்டத் தில் இருக்கிறது. மாவட்டத்தின் உயரதிகாரிகளான கலெக்டர், போலீஸ் எஸ்.பி. தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள்வரை கருணாஸுக்கு ஒத்துழைக்கக் கூடாது என கோட்டையிலிருந்து உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதனால், தொகுதி சார்ந்த எந்தப் பணிகளையும் கருணாஸால் செய்ய முடியவில்லை. இதனை எடப்பாடி யிடம் சொல்வதற்காக பலமுறை முயற்சி செய்தும் அப்பாயின்ட்மெண்ட் மறுக்கப்பட்டது.


சீனியர் அமைச்சர்கள் இரண்டு பேரை சந்தித்த கருணாஸ், "முதல்வர் என்னை எதிரியாக நினைத்தால் அவரை நானும் எதிரியாக நினைக்க வேண்டிய திருக்கும். என்னை அழிக்க நினைத்தால், கூவத்தூரில் நடந்தது சம்பந்த மான ஆதாரங் களை பொது வெளியில் வெளியிட்டு விடுவேன்' எனச் சொல்லி விட்டு வந்தார். இதனை எடப்பாடி யிடம் சீனியர் அமைச்சர்கள் தெரிவித்தும் பாசிடிவ்வான பதில் இல்லை என்பது கருணாஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளது. "உங்கள் மீது ரொம்பவும் காட்டமாகவே இருக்கிறார் முதல்வர். ஆதாரங் களைத் தந்தால் ஒரு வேளை அவர் சமாதான மாகலாம்' எனச் சொல்ல... ஆதாரங்களை தர மறுத்துவிட்டார் கருணாஸ்.


வீடியோ ஆதாரங்களைப் பறிப்பதற்காக கருணாஸுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டி, அவரைச் சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள் தாமோதரகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்கு களைப் புனைந்தது போலீஸ். இவர்களைத் தூக்கி குண்டாசில் போட்டால்தான் கருணாஸ் அடங்குவார் என கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடியின் காவல்துறை விளையாடியது. இதனை எதிர்த்து டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர் கருணாஸ் தரப்பினர். ஆனாலும், பொய் வழக்கு போடுவது நிற்கவில்லை.


அ.தி.மு.க. ஆட்சி கவிழாமல் இருப்பதற் காக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது, சசிகலாவின் திட்டப்படி கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதிலும் டீலிங் பேசுவதிலும் கருணாஸுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. தனது முக்குலத்தோர் புலிப்படையினரை வைத்து போயஸ் கார்டன் முதல் கூவத்தூர் ரிசார்ட் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் கருணாஸ். மேலும், கூவத்தூரிலும் கூவத்தூருக்கு வெளியே யும் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாப்பதில் கருணாஸின் பங்களிப்பு நிறைய இருந்திருக்கி றது. குறிப்பாக யார், யாருக்கு என்ன செய்யப் பட்டது?, என்ன மாதிரியான பேச்சுவார்த்தை கள் நடந்தன, கொடுக்க வேண்டியதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், கூவத்தூரில் எடப்பாடியின் செயல்பாடுகள் எப்படி இருந் தன? ரிசார்ட்டில் இரவு நேரத்தில் நடந்த விவாதங் கள் என பல விஷயங்களில் கருணாஸின் புலிப்படை யினர் சம்பந்தப்பட்டுள்ளனர். முழு விவரமும் அவர்களுக்குத் தெரியும்.


இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அந்த வீடியோக்கள் பொதுவெளியில் வெளி யானாலோ அல்லது தி.மு.க. தரப்பிடம் சிக்கி னாலோ முதல்வரான பின் சசிகலாவையே டபாய்த்த எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த பயம்தான் எடப்பாடியை கருணாஸுக்கு எதிராகக் கோபப்பட வைக்கிறது. அந்த வீடியோக் களை பறிப்பதற்காகத்தான் முதலில் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்களை வளைத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பிறகு கருணாஸை வளைப்பது என திட்டமிட்டிருந்தது எடப்பாடி யின் காவல்துறை. அதற்குள் உணர்ச்சிவயப்பட்டு கருணாஸே மாட்டிக்கொண்டு விட்டார். இப்போது, கூவத்தூர் வீடியோக்களை கேட்டு வேலூர் சிறையில் கருணாஸுக்கு டார்ச்சர் தரப் படுகிறது'' என பின்னணிகளை விவரிக்கின்றனர் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள்.