நடிகர் ஆரி நடத்திய 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற வேளாண்மை முக்கியத்துவத்தை சொல்லும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த பிரபலங்களில் ஒருவராக ஐஏஎஸ் அதிகாரி சகாயமும் கலந்து கொண்டு உரையாற்றினார். தன் உரையாடலில் வேளாண்மையின் முக்கியத்துவமும் விவசாயிகளை பற்றியும் பெருமிதமாக பேசியிருக்கிறார்.
நான் ஐஏஎஸ் தேர்வில் வென்று பின்னர் டெல்லியில் பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது அங்குள்ள சகமானவர்கள் அவர்களை பற்றியும் அவர்களின் பெற்றோர்களை பற்றியும் அவர்களது பின்னணி பற்றியும் கேட்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களது அப்பா என்ஜினீயர், டாக்டர், பிசினஸ் மேன் என்று இறுமாப்போடு சொல்வார்கர்கள். என்னிடம் உங்களின் பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்று கேட்கும்போது, "பெருமை வாய்ந்த விவசாயி, மக்களுக்கு சோறுபோடுபவரின் பெருமை வாய்ந்த மகன்" என்று பெருமையாக கூறுவேன். அவர்கள் இறுமாப்பாய் அவர்களது பெற்றோர்களை பற்றி கூறியதை விட, நான் கூடுதலான இறுமாப்புடன் கூறுவேன். இன்னொரு விஷயம், எனது மணி பர்ஸில் மாதக்கடைசி என்றால் பணம் குறைந்துக்கொண்டே இருக்கும். ஆனால் எனது பர்சில் ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் குறையாது. அது என்னவென்றால், என் ஊரில் இருக்கும் என் சொந்த விவசாய நிலத்தின் பிடிமண். அந்த பிடிமண் நான் எங்கு போனாலும் உடன் இருக்கும், இதன் மூலம் நான் நிலம் அதன் உணர்வு உடன் இருப்பது போன்ற ஒரு மகிழ்வு ஏற்படும். ஆதலால் அதனை என்னுடனே வைத்திருப்பேன்.
தேர்தல் பணிக்காக நான் உத்திர பிரேதச மாநிலம் சென்றபோது கங்கைக்கரை ஓரத்தினிலே வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, உடையார் எனப்படும் ராஜராஜசோழனின் பெருமையையும், காவேரி கரையின் பெருமையும் கூறும் நாவல். அந்த நாவலை படித்துக்கொண்டிருப்பேன். கங்கைக்கரையில் இருந்தாலும் கூட என் நினைப்பு முழுவதும் காவேரி கரையை சார்ந்துதான் இருக்கும். உலகம் போற்றும் சாம்ராஜ்யத்தில் ஒன்றாக ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்யம் இருந்திருக்கிறது. கிபி 500 ஆண்டில் கப்பல்படைகளை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் அவர்கள் கைவசம் கொண்டுவந்தார்கள். பின்னர் ஏன் கிபி 1000 ஆண்டுக்கு முன்னரே பெரும் கப்பற்படையை வைத்திருந்த ராஜேந்திர சோழனால் வெறும் பர்மாவையும், வியட்னாமையும் மட்டும் பிடித்து அதில் அவரின் புலிக்கொடியை நடாமல் விட்டுவிட்டனர். ஏனனெனில் ராஜேந்திர சோழனின் படை வேளாண்மையை முதன்மையாக செய்தவர்கள். ஆனால், ஆங்கிலேய படையோ வணிகம் மற்றும் அல்லாமல் சூது, சூழ்ச்சி மற்றும் மோசடியை ஆகியவற்றையும் செய்தனர். இதுதான் காரணம், ராஜேந்திர சோழன் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்காததற்கு. "விவசாயம் என்பது அறத்தை போற்றுவது. ஆகையால் அத்தகைய விவசாயத்தை நாம் போற்றுவோம். வாய்ப்பு கிடைக்கும்போது விவசாயிகளுக்கு உதவுங்கள், நாங்களும் கலப்பை என்ற ஒரு திட்டத்தை வைத்து விவசாயிகளுக்கு உதவி செய்துகொண்டு வருகிறோம்".
"இந்தியாவின் வல்லரசு பாதை விண்வெளியில் இருக்கிறது என்று சொல்பவர்கள் எல்லாம் மோசடியாளர்கள், இந்தியாவின் வல்லரசு பாதை விவசாய நிலங்களில் தான் இருக்கிறது". அமீர் ஊருக்கு வாருங்கள் என அழைப்பதுபோல் அரசியலுக்கு அரசியலுக்கு வாருங்கள் என அழைக்கிறார். ஊழலை நான் எப்போது எதிர்த்தேனோ அப்போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்". நான் ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றியபோதே பல இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருகின்றேன். பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை தடை செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு தற்போதுதான் ஏற்பட்டு வருகிறது. ஆனால், அதை நான் 2000 ஆண்டின் தொடக்கத்திலேயே எட்டு பூட்டு போட்டு சீல் வைத்து நிறைவேற்றினேன். அதன்பின் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இதுவரை மொத்தம் 26 முறை பணிமாறுதல்கள் பெற்றிருக்கிறேன், என் மனைவி என்னுடனே 20 இடங்களுக்கு மாறிருக்கிறார். இது எங்களுக்கு பழகிவிட்டது.
"அனைவரும் விவசாயத்திற்காக உதவுங்கள்" எனக்கூறி அவர் உரையை முடித்துக்கொண்டார்.