மஹாராஜா ஜெய் சிங் லண்டனுக்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டார், அப்போது சாதாரணமான உடையை அணிந்துகொண்டு எந்தவித அல்டாப்பும் இல்லாமல் வீதியில் நடந்து சென்றுள்ளார். அச்சமயத்தில் ரோல்ஸ்-ராய் கார் ஷோரூம் முன் நின்று பார்த்திருக்கிறார். பின்னர், உள்ளே சென்று இந்த காரின் சிறப்பு என்ன என்று கேட்கலாம் என யோசித்து நகர்ந்திருக்கிறார். அங்கு இருந்த செக்கியூரிட்டி அவர் இந்தியர், அதுவும் பார்க்க சாதராணமானவராக இருக்கிறார் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மஹாராஜா அந்த ரோல்ஸ் ராய் ஷோரூமில் உள்ள அனைத்து கார்களையும் வாங்கிகொண்டு இந்தியாவிற்கு வந்துவிட்டார். பின்னர், அவருடைய சமஸ்தானத்தில் குப்பை அள்ள இந்த கார்களை பயன்படுத்தினார் என்ற கதை சமூக வலைதளங்களில் பரவலாக பரவி இருக்கிறது. இப்போதும் கூட இது உண்மை கதை என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது உண்மை இல்லை. 90ஸ் கிட்ஸ்கு சொல்லப்பட்ட பல புரளிகளில் இதுவும் ஒன்று.
இந்த கதையை போலவே நிஜத்தில் ஒன்று நடந்துள்ளது. ரூபன் சிங் என்ற லண்டன் தொழிலதிபரின் டர்பனை வேறொருவர் கிண்டலடித்ததால், அவர் அணியும் டர்பன் நிறத்திற்கு ஏற்றவாறு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி சென்றுள்ளார். 7 நாட்களுக்கு 7 விதமான டர்பன், 7 விதமான நிறங்களில் ரோஸ்ஸ்-ராய்ஸ் காரில் சென்று அதை ஒரு சேலஞ்சாக கடந்த வருடம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார். இதனால் ரூபன் சிங் உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்தார். ‘ஆல்டே பிஏ’ என்ற நிறுவனத்தின் சிஇஒ வாக இருக்கிறார். மேலும் இஷர் கேபிடல் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரை பிரிடிஷின் ‘பில் கேட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார். சுமார் 750 கோடிகளுக்கு மேல் இவருக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பல விதமான உயர் ரக கார்களை வாங்குவதில் இவருக்கு நாட்டம் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் மட்டும் 20 கார்கள் வைத்திருக்கிறார். இது இல்லாமல் புகாட்டி வெய்ரான், ஃபெராரியில் லிமிடெட் எடிஷன் கார்கள் என்று விலை உயர்ந்த கார்களை வாங்கி இருக்கிறார்.
இதுபோல தன் திறமையாலும், ஆடம்பரத்தாலும் வெளியுலகுக்கு தெரியும் ரூபன் சிங், மீண்டும் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பிரபலமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தது. இந்த முறை நகை கலெக்ஷன்ஸ் என்று மரகதம், மாணிக்கம், நீலக்கல் ஆகிய நிறத்தில் மூன்று ரோல்ஸ்ராய்ஸ் பேந்தோம் சிடேன்களும் மூன்று குலினல் எஸ்யூவி கார்களும் வாங்கியிருக்கிறார். ரோல்ஸ்ராய்ஸ் பேந்தோம் செடனின் விலைசராசரியாக பத்து கோடி இருக்கும். ரோல்ஸ்ராய்ஸ் குலினன் எஸ்யூவியின் விலை சுமார் 7 1/2 கோடி இருக்கும்.