சில தினங்களாக நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை மையப்படுத்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மகளிர் அணியினர் அவரது வீட்டை நேற்று முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒடுக்கப்பட்ட மக்களையும் கடந்து அனைத்து ஜாதியினரையும் ஒரு பொது நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து பாடுபடுபவர் எழுச்சி தமிழர் திருமாவளவன். அவர் இந்து கடவுள்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக கருத்துக்களை எதனடிப்படையில் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மணிமேகலை காப்பியத்தில் ஆபுத்திரன் என்ற பகுதியில் இந்து கடவுள்களை பற்றி என்ன போட்டிருக்கிறது என்று யாராவது அவரிடம் எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும். கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்து கடவுள்களை பற்றி அதில் இருக்கும். திருமா ஒன்றும் இல்லாத தகவல்களை சொல்லவில்லை. ஆதாரத்தை கூட நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் போய் தெரிந்துகொள்ளுங்கள். சங்கிகள் ஒரு முடிவோடு தற்போது களத்தில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேற போவதில்லை. அவரின் வீட்டை முற்றுகையிட்டது தவறு என்று சொல்ல முடியாது. அவர் கருத்தியல் ரீதியாக மோதினால் பதில் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், ஒன்டிக்கொண்டி வரியா என்று சவால் விட்டால் எல்லா தொண்டர்களும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நாம் நினைக்க முடியாது அல்லவா.
அதுவும் காயத்ரி போன்ற அரசியல் அறிவு கொண்டவர்களுக்கு எப்போதும் இந்த மாதிரியான புரிதல்களே அதிகம் இருக்கும். அவர்களுக்கு தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் ஒரு சண்டை ஏற்படுத்தவே அதிகம் விரும்புவார்கள். அதன் வெளிப்பாடே திருமாவளவன் விஷயத்தில் மருத்துவர் ராமதாலை துணைக்கு கூப்பிட்ட நிகழ்வு காட்டுகிறது. இதைத்தான் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருந்தார். பார்ப்பனர்களின் எண்ணம் நமக்குள்ளேயே கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயலாம் என்று நினைப்பார்கள் என்று கூறியிருந்தார். அன்று அவர் சொன்ன விஷயங்களை தற்போது காயத்ரி நடைமுறை படுத்துகிறார். நாம் எல்லாம் சேர்ந்து அவர்களை துரத்தாதன் விளைவு அவர்கள் தற்போது நம்மை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்கபோவதில்லை. அவர்களின் எண்ணமும் நிறைவேற போவதில்லை என்பதே உண்மை. பெரியார் மண்ணில் அவர்களின் சூழ்ச்சி இருக்கும் இடம்தெரியாமல் போகப்போகிறது என்பது மட்டும் நிஜம்.