நாடு முழுவதும் பல முக்கியமான தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும், இணையச் செய்தித்தளங்களையும் தனது கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக, லைசென்சுக்கு விண்ணப்பிக்காமலேயே நமோ டி.வி. என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியை ஒரு வாரமாக ஒளிபரப்புகிறது.
இதுதொடர்பான புகாருக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி யாருக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று மத்திய அரசு பதலளித்துள்ளது.
இதுதான் மோடி நாட்டைக் காப்பாற்றும் லட்சணமா என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ் வைரலாகிறது. ஆனாலும் பாஜக இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை.
லைசென்சுக்கு விண்ணப்பித்து காத்துக்கிடக்கும் நிலையில், விண்ணப்பிக்காமலேயே அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் அரசுக்கே தெரியாமல் தொலைக்காட்சியை ஒளிபரப்ப முடிகிறது என்றால் நாடு எங்கே போகிறது?