Skip to main content

2019 தேர்தலில் மோடிக்கு ஆப்பு உறுதியாகிருச்சு!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிப்பதற்காக பாஜக படு டகால்டி வேலைகளில் ஈடுபட்டது. ஆனாலும், உத்தரப்பிரதேசத்திலும், பிகாரிலும் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

modi mask

குஜராத்தில் தொடங்கிய இந்த ஷாக் ட்ரீட்மெண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநில மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஆனால், பாஜக அதை மழுப்பியது. மீடியாக்களிலும் அந்தத் தோல்விகள் பிரச்சாரம் ஆகாமல் தடுத்துவிட்டது.

சமீபத்தில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத், துணை முதல்வர் மவுர்யா ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோரக்பூர், புகுல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிகாரில், ஆராரியா தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத் தொகுதியான கோரக்பூரிலும், புகுல்பூரிலும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிக்கிறது.

bihar election

எனவே, கோரக்பூரில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றும் முயற்சியாக வாக்கு எண்ணும் இடத்திலிருந்து பத்திரிகையாளர்களையும், சமாஜ்வாதி கட்சியினரையும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், ஏற்கெனவே பல தேர்தல்களில் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாக பாஜக மீது புகார்கள் உள்ள நிலையில் இனியும் அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்று கூறப்படுகிறது.

yogi adhithyanath with maurya