Skip to main content

எனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

விடுதலைக்குப் பிந்தைய தமிழகத்தில் ஊரகப் பகுதிகள் வேகமாக மின்சாரமயமாகி திரையரங்குகள் பரவின. தி.மு.க. திரைப்படங்களை அரசியல் பரப்புரை நிகழ்த்தப் பயன்படுத்திக் கொண்டு மூன்று வழிகளில் ஈடுபட்டது. எம்.ஜி.ஆர். இரண்டு வழிகளை எடுத்துக்கொண்டார்.

 

anna



1.நேரடி பரப்புரை - சர்வாதிகாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, நாடோடி மன்னன், தாய்மகளுக்கு கட்டிய தாலிலி, ஆகியவற்றில் நாத்திக வாதம், வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, காமுகரான குருக்களும் சாமியார்களும், கல்லான தெய்வங்கள், கொடுமைக்கார லேவாதேவிகள், வில்லத்தன பிராமணர்கள் காட்டப்பட்டடனர். நாடோடி மன்னன் தி.மு.க.வின் மக்கள் சேவையை வெளிப்படுத்தியது என்றார் எம்.ஜி.ஆர்.

2.கட்சி அடையாளம், கட்சி வண்ணம். தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றைப் படங்களில் காட்டினார். "ராஜகுமாரி'யில் கருஞ்சட்டை, நாடோடி மன்னனில் தி.மு.க. கொடியும் உதயசூரியனும்; சக்கரவர்த்தி திருமகளில் உதய சூரியன் என்ற பெயர், "புதிய பூமி'யில் கதிரவன் என்றே பெயர், "காஞ்சித் தலைவன்' என்று படத்தின் பெயர். "உதய சூரியன் வெகுசீக்கிரம் வெளிச்சம் கொண்டு வரும்.' "அண்ணா நம்புகிறேன்! ஒட்டு மொத்த நாடும் உங்களை நம்புகிறது. உங்களையே பின்பற்றவும் செய்யும்.' "எனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்' என்று பேசினார்கள்.

 

mgr



"அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' என்று அண்ணாவைப் பாடினார்.

படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லை
சர்க்காரு ஏழைப் பக்கம் இருக்கையிலே - நாங்க
சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
என்று தி.மு.க. ஆட்சியைப் பாடினார்

(ஒளிவிளக்கு). "நம் நாடு' படத்தில் கருப்பு சிவப்பு
ஆடையும் அண்ணா உருவப்படமும், அவரைத் தென்னாட்டு காந்தி என்ற புகழ்ச்சியும், சேரிப் பகுதிகளில் தி.மு.க. கொடியும், கருப்பு சிவப்பு சுவரொட்டிகள் என்று தி.மு.க. பதிவுகள்.

சூரியன் உதிச்சதுங்க

இங்கே காரிருள் மறைஞ்சதுங்க

சரித்திரம் மாறுதுங்க இனிமே

சரியாப் போகுமுங்க

என்று "வாங்கய்யா வாத்தியார்' பாடல் முழக்கம்.

1951-இல் வந்த "மர்மயோகி' வீரதீர பராக்கிரம சாகசநாயகன். இப்படமும் தி.மு.கழகச் சார்பு படமாகக் கருதப்பட்டது, கழக ஆதரவாளர்களால். ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாலிலிபப் பெரியார் என்ற வர்ணிக்கப்பட்டார். இவர் வசனம் எழுதிய படம் "சர்வாதிகாரி'. பிரதாபனாக எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் மந்திரிசபை. ஒரு பாடலில்,

உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க

இங்கே மந்திரிகளுக்கே மக்களுன்னு ஆச்சுதே’’

என்று பாடுவார்.

தேசியக் கவிஞர் வெ.ராமலிலிங்கம் பிள்ளையின் மலைக்கள்ளனில் நடித்தார். கவிஞர் சென்னை மாநில ஆஸ்தான கவிஞர். அரசியல் கலப்பில்லாமல் மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதன் கவிஞர்களும் சம்பந்தப்பட்டால் படம் வெற்றிபெறும் என்ற அந்த இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத படத் தயாரிப்பாளர்களும் நம்பிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில்சேர்ந்துகொண்டார்.1957-இல் தி.மு.க.விற்குஉதயசூரியன் சின்னம் கிடைத்தது. இதே ஆண்டில் சக்கரவர்த்தித் திருமகன். இதில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் உதயசூரியன். வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மாவீரன் பாத்திரம். சட்டசபை தேர்தலிலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது.

-காவ்யா சண்முகசுந்தரம்.