Skip to main content

“இலண்டன் உங்களை அன்புடன் வரவேற்கவில்லை” - மோடியிடம் இலண்டன் வாழ் இந்தியர்கள்.

Published on 17/04/2018 | Edited on 18/04/2018

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு ஸ்வீடன் மற்றும் இலண்டன் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.  சமீபத்தில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் தமிழகம் வந்து சென்ற மோடிக்கு, இலண்டன் வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த தயராகி உள்ளனர்.


 

Modi not welcome


டவுனிங் தெருவில் இலண்டன் பிரதமர் தெரசா மேயை நாளை மோடி சந்திக்கிறார். இதையொட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தெற்கு ஆசியர்கள் குழு (South Asia Solidarity Group) நாடெங்கிலுமுள்ள இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் சுமார் 2000 இந்தியர்கள்
கூடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Modi not welcome1


மோடியை கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் ஏந்திய LED திரை பொறுத்தப்பட்ட ஒரு வேன் இலண்டன் வீதிகளில் உலா வருகிறது. அதில்..”மோடி ஒரு பாசிஸ்ட் (Fascist), அவர் ஹிட்லரை பின்பற்றுபவர். சாதி அடுக்குகள் கொண்ட சமூகத்தையே விரும்பும் மோடி, 
குழந்தைகளை பெண்களை கற்பழித்துக் கொல்லும் கொடூரன்களை பாதுகாக்கிறார். இஸ்லாமியர்களை மதவெறியுடன் தாக்கும் ஹிந்துத்துவா கும்பலை போற்றும் மோடி, தலித் கொலைகளையும் ஆதரிப்பவர்.” 
மேலும், வலதுசாரி கும்பலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், சிறுமி ஆசிஃபா போன்றோரின் புகைப்படங்களும், செய்திகளும் இடம்பெற்றிருந்தது. 

modi not welcome3

இணையத்தில் #ModiNotWelcome, #JusticeforAsifa என்ற ஹேஷ்டேக்குகளுடன் இலண்டனில் இருந்து மோடி எதிர்ப்பு அலை வேகமாக அடிக்கத் துவங்கியுள்ளது.