சென்னை ஐஐடி-யில் கேளராவை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளா். மாணவி மரணம் தொடர்பாக பெரிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தன் மரணத்துக்கு கல்லூரி பேராசிரியர் தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்கு மமகவை சேர்ந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா பதில் அளித்துள்ளாரர். அவரின் பதில்கள் பின்வருமாறு,
சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை தொடர்பாக உங்களின் கருத்து என்ன?
பாத்திமா லத்திப் என்ற அந்த மாணவி கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். படிப்பில் படுசுட்டியான அவர், பள்ளி காலங்களில் மட்டும் அல்லாது கல்லூரி படிப்பிலும் அதிகப்படியான மதிப்பெண்களையே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு எழுதிய நுழைவு தேர்வில் அவர் முதல் மதிப்பெண் எடுத்தே சென்னை ஐஐடியில் சேர்ந்தார். மிகப்பெரிய கனவுகளோடு அவர் சென்னை ஐஐடிக்கு வந்துள்ளா். அவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அப்போது அவரின் தொலைபேசியில் தன் தற்கொலைக்கு கல்லூரியின் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று தெரிவித்துள்ளா். மேலும் இதுதொடர்பான முழு தகவல்களையும் தன்னுடைய சாம்சங் நோட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் தந்தையோடு நான் பேசினேன். அவர் தன் மகள் தொடர்பாகவும், ஐஐடியில் பாத்திமாவுக்கு கொடுக்கப்பட்ட தொந்தவுகள் குறித்தும் பேசினார். மாணவி, கல்லூரியில் மத ரீதியான தாக்குதலை எதிர்க்கொண்டுள்ளார். முஸ்லிமாக இருப்பதே இங்கு பெரிய சவாலாக இருப்பதாக அவர் கூறியதாக மாணவியின் தந்தை என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பு ஐஐடி கேன்டீனில் இரவு 9மணிக்கு அழுது கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்றமாதம் கல்லூரியில் நடைபெற்ற இன்டெர்னல் தேர்வில் மற்ற அனைத்து பாடங்களிலும் 20க்கு 19, 18 என்று எடுத்துள்ளார். ஆனால், பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் பாடத்தில் மட்டும் அவருக்கு 13 மதிப்பெண்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் துறைத் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் முகநூல் உள்ளிட்டவைகளில் உங்களுக்கு எப்படி ஐஐடியில் இடம் கிடைத்தது என்ற தொனியில் கேள்விகள் வந்துள்ளது. மேலும் மத ரீதியான கொடுமைகள் அவருக்கு அங்கு அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐஐடியில் இந்த மாதிரியான விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அங்கு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இடதுசாரி மாணவர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதையும் தாண்டி மாணவர்களை போல, சாதி பாகுபாட்டிற்கு பேராசிரியர்களும் இலக்காவது உண்டு. அந்த வகையில் ஐஐடியில் சாதி பாகுப்பாட்டை நீக்கி மற்ற கல்லூரிகளை போன்று செயல்பட தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அதனை உடனடியாக செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதில் கால தாமதமோ, கால விரயமோ செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை. அரசும், கல்லூரி நிர்வாகமும் உடனடியாக விழித்துக்கொள்வது நல்லது. அதுவே மாணவர்கள் அமைதியான சுழலில் கல்வி கற்க வழிவகை செய்யும்.