Skip to main content

குஜராத் கலவரத்தின் முதல் நெருப்பு பற்றவைக்கப்பட்டது!

Published on 27/02/2018 | Edited on 28/02/2018

 

பிப்ரவரி 27 - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள் 

இந்தியாவின் குஜராத் மாநிலம் உலகத்துக்கே அஹிம்சை வழியால் பெரும் அதிகாரம் கொண்ட சாம்ராஜ்யத்தை விரட்ட முடியும் என நிரூபித்த காந்தி பிறந்த மண். அந்த மண்ணில் தான் அதிகாரத்துக்காக மனித இனத்தை அழிக்கலாம் என இந்தியாவுக்கு வழி காட்டியது விந்தையிலும் விந்தை.

 

kothari incident


2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை நரேந்திரமோடி முதல்வராக இருந்து ஆட்சி செய்து கொண்டு இருந்தார். குஜராத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயில் யாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷித் என்கிற இந்து இயக்கத்தினர் சென்று விட்டு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் 1700 பேர் அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பிப்ரவரி 27ந்தேதி இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தொடர்வண்டி வந்து நின்றது.

அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் நின்று கொண்டு கோஷமிட்டனர். அப்போது அந்த ரயிலின் எஸ்5 என்கிற ரயில் பெட்டி தீ பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 3 பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டியில் கரசேவகர்கள் இருந்தனர். அந்த இரயிலை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் தீயை அணைக்காமல், அதிகரிக்க வைத்தது. இதில் இரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இந்த படுகொலையால் இந்தியா மட்டுமல்ல  உலகமே  அதிர்ந்தது.

இரயிலுக்கு வைக்கப்பட்ட இந்த 'தீ'க்கு காரணம் இஸ்லாமியர்கள் என்கிற தகவல் வேக வேகமாக குஜராத்துக்குள் பரப்பப்பட்டது. இந்தத் தகவல் தெரிந்தும் குஜராத் காவல்துறையின் கண்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடச்சொன்னார்கள். அவர்களும் மூடிக்கொண்டார்கள். வன்முறை வெறியாட்டம் கோத்ராவில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது.
 

godhra train burning

அன்றிருந்து அடுத்த மூன்று மாதம் குஜராத் முழுவதும் ரத்தவாடை வீசியது. மே மாதம் இறுதியில் கலவரம் அடங்கிய பின் அரசு அறிவிப்பின்படி 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த கலவரம் முடிந்தபின்பு, நூற்றுக்கணக்கான உண்மை அறிக்கைகள், விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களின் நேரடி காட்சிகள் செய்திகளாகவும், ஆவணப்படங்களாகவும், சினிமாவாகவும், புத்தகமாகவும், நாவலாகவும் வெளிவந்தன.

கர்ப்பினி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். தங்களது பாலியல் வெறியை தீர்த்துக்கொண்டபின் பெண்களை கொலை செய்து வீசினார்கள். தடுக்க வந்த இஸ்லாமிய ஆண்கள் வெட்டி வீசப்பட்டார்கள். இப்படி எண்ணற்ற குரூரங்கள் இந்த கலவரங்களின் போது நிகழ்த்தி முடிக்கப்பட்டன.

இவை அனைத்துக்கும்  அப்போது ஆட்சியில் இருந்த குஜராத் முதல்வரான நரேந்திரமோடி குற்றம்சாட்டப்பட்டார். அதோடு, இந்த கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கியது இந்துத்துவா அமைப்புகள் தான் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில்  குஜராத் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்ட பல உயர் அதிகாரிகள் இதனை  வெளிப்படையாக கூறினார்கள்.
 

kodhari


ரயில்வே துறை அமைத்த விசாரணை கமிஷன், கோத்ரா ரயில் எரிந்தது ஒரு விபத்து என்றது. காவல்துறையின் சிறப்பு புலனாய்வுத்துறை இது  இஸ்லாமியர்களின் திட்டமிட்ட வன்முறை என்றது. நானாவதி கமிஷன், பானர்ஜி கமிஷன் போன்றவை வெவ்வேறு முடிவுகளைக் கூறின. இப்படி ஆளாளுக்கு ஒரு முடிவை அறிவித்து மக்களை குழப்பின.

வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணையின் முடிவில் 2011 பிப்வரி 22ந்தேதி இந்த கோத்ரா கலவரத்துக்கு காரணமென 31 நபர்களை குற்றவாளிகளாக்கியது நீதிமன்றம். இவர்கள் சிறையில் சொகுசாக வாழ்ந்தார்கள். கலவரத்தைத் தடுக்காத அரசையும், அதன் நிர்வாகத்தையும் நீதிமன்றம் புனிதமாக்கியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதனைத்  தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கமும் 15 ஆண்டுகளைக்  கடந்து இன்றும் சிறுபான்மையின மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்லாது பெரும்பான்மை மக்களின் மனசாட்சியையும் உலுக்கிக்கொண்டே இருக்கின்றன.

 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.