Skip to main content

தமிழக அரசின் தோல்வியே சிறுமி ஜெயஸ்ரீ மரணத்திற்கு காரணம் - எவிடென்ஸ் கதிர் பேச்சு!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
s



நேற்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை இரண்டு நபர்கள் கை, கால்களை கட்டி தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அவர்களை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக எவிடென்ஸ் கதிர் ஆவேசமாக கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவை வருமாறு, “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூரில் சிறுமி ஜெயஸ்ரீ கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியை எவ்வித இரக்கமும் இல்லாமல் எரித்துக் கொன்றுள்ளார்கள். அந்த சிறுமியை யாரும் எதிர்பாராத வண்ணம் பெட்ரோல் ஊற்றி அதிமுகவை சேர்ந்த இருவர் அந்த சிறுமியை கொன்றுள்ளார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


அந்த சிறுமி கொளுத்தப்பட்ட நிலையில் அவர் பேசிய காணொளியை நாம் அனைவரும் பார்த்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேதனையாக இருந்தது. இரண்டு அதிமுகவை சேர்ந்த நபர்கள் ஏதோ அவர்களின் குடும்பத்தின் மீது இருந்த முன்பகை காரணமாக தேவையில்லாமல் இந்த சிறுமியை எரித்துள்ளார்கள். இத்தகைய கொலைகளுக்கு மிக முக்கிய காரணம் தமிழக அரசும், முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அவர்களும்தான். அவரின் நிர்வாகம் மிகவும் கேவலமாகவும், சீட்கெட்டு போயும் இருக்கின்றது. 2018ம் ஆண்டு ராஜலெக்ஷி என்ற சிறுமி ஆத்தூரில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இன்னமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. தீர்ப்பு வழங்கப்படவில்லை. 

 

 


இது எதற்காகவும் போராடாத எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் விவகாரத்திற்காக உச்சநீதிமன்றம் செல்கிறார். இந்தமாதிரி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றம் நடந்த இரண்டே மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதி இருக்கின்றது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விதி இருக்கின்றது. ஆனால் எடப்பாடி அரசு, குழந்தைகள் விஷயத்தில் மிக மெத்தனமாக இருக்கின்றது. கடந்த மூன்று நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள், சிலர் ஹானர் கில்லிங் செய்யப்பட்டுள்ளார்கள்.

 


இதில் சில செய்திகள் பத்திரிகைகளிலேயே வரவில்லை. நெல்லை உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 15 வயதிற்கும் குறைவான மூன்று பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இது கடந்த மூன்று நாட்களில் மட்டும் நடைபெற்ற சம்பவம். இன்னும் வெளி உலகத்திற்கு தெரியாத சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றது. 2012ம்  ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட போது நீதிபதி வர்மா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்கள். அவர்கள் இந்தமாதிரியான வழங்குகள் விரைந்து நடைபெற வேண்டும் என்று தன்னுடைய பரிந்துரையில் கூறியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் உடைய லட்சணம் ரொம்ப கேவலமாக இருக்கின்றது. இதற்கு இங்கு ஆள்பவர்களே மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள்" என்றார்.