கட்டெறும்பு சைசில் ஒரு ஓணான்!
முதுகெலும்பு உள்ள பிராணிகளில் உலகின் மிகச் சிறியது இந்த புரூக்கெசியா மைக்ரா. 2012ல்தான் இது விலங்கியலுக்கு அறிமுகமானது.
ஒரு கட்டெறும்பு அளவுதான் இருக்கிறது. இனப்பெருக்கத்திற்காக தனக்கான ஒரு ஜோடியை இது தேடவேண்டும் என்றால் எவ்வளவு சிரமம்.
இந்த விலங்கு அறிமுகமாகும்வரை மடகாஸ்கர் தீவைச் சேர்ந்த பூரூக்கெசியா மினிமா என்ற விலங்குதான் உலகின் மிகச் சிறிய முதுகெலும்புப் பிராணியாக கருதப்பட்டது.
எப்படியிருந்தாலும், கட்டெறும்பைக் காட்டிலும் கொஞ்சம் பெரிய இந்த ஓணான், பரந்த வனத்தில் தனது துணையை தேடிக்கண்டுபிடிக்கும் காட்சியை டேவிட் ஆட்டன்பரோ என்பவர் பிபிசிக்காக விடியோ படமெடுத்துள்ளார்.
-ஆதனூர் சோழன்