பட்ஜெட் - 2018 சிறப்பம்சங்கள்

2018- 2019 க்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளில் இந்த பட்ஜெட்டும் ஒரு முக்கிய காரணி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது
முதன்முதலாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட்டை வாசிக்க இருக்கிறார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கு பட்ஜெட் புரியாதததால் ஹிந்தியிலும் சேர்த்து வாசிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதன்முதலாக ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் ஒரே நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பா.ஜ.க. அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. அடுத்த வருடம் பல மாநிலங்களில் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது.
வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்கும் முன் வரும் பட்ஜெட்டிலும் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பெருவாரியான மக்களை ஈர்க்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கானதாக இருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., விவசாயிகள் பிரச்சனை, சிறு, குறு வணிகர்கள் பிரச்சனை,பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அதை சரிசெய்யும் விதமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டிற்கு ஆதரவாக, முதலீட்டை அதிகரிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என்று வல்லுநர்கள் கருதிகின்றனர்.
இந்த பட்ஜெட் வெற்று கவர்ச்சிகரமானதாக இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7 மணிமுதல் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் ட்வீட்டர் பக்கத்தில் #askyourfm என்ற ஆஸ்டாக் மூலமாக பட்ஜெட் குறித்த கேள்விகளை கேட்கலாம் என கூறியுள்ளனர்.
-கமல் குமார்