Skip to main content

மருத்துவ கல்வியைத் தொடர்ந்து IAS, IPSஇல் கைவைக்கும் அரசு...

Published on 19/05/2018 | Edited on 21/05/2018

நீட் தேர்வு தமிழகத்தில் பல உயிர்களை காவு வாங்கியது, பலரை அலர வைத்தது, அலைய வைத்தது. இருந்தும் அதைத் தடுக்க  ஒன்றும் செய்யமுடியவில்லை. போன வருடம் நீட் வேண்டாம் என்றவர்களை இந்த முறை தயவுசெய்து சொந்த ஊர்களிலேயே நடத்துங்கள் என கெஞ்சவைத்தது. அந்த வகையில் நீட் (மத்திய அரசு) வென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். தற்போது அடுத்த பிரச்சனையாக இந்திய குடிமைப் பணிகள் தேர்வு மற்றும் கேடர் ஒதுக்கீட்டில் கைவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

neet

 

 

 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு பணிகள்தான் இந்திய குடிமைப் பணிகள் (civil services). இந்தப் பணிகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தேர்வுமுறை என்னவென்றால் முதலில் முதல்நிலைத் தேர்வு (preliminary exam) எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெறுவோர் பிரதான தேர்வுக்கு (main exam) அழைக்கப்படுவர். பிரதான தேர்வை முடித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இவைகளிலெல்லாம் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்களின் ரேங்க் அடிப்படையில் கேடர் அல்லோகேஷன் (பணிபுரியும் மாநிலம்), சர்வீஸ் அல்லோகேஷன் (பணி) வழங்கப்படுவர். அதன்பின் பயிற்சி நடக்கும். பயிற்சி காலம் மொத்தம் இரண்டு ஆண்டுகள். இதில் முதல் வருடம் மிசோரியிலுள்ள பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறுவர், இதற்கு அகாடமிக் ட்ரெய்னிங் என்று பெயர். இதில் முதல் நூறு நாட்கள் ஃபவுண்டேஷன் கோர்ஸ் என்று நடத்தப்படும். தேர்ச்சி பெற்ற அனைவரும் அதில் பங்கு பெறுவர்.

 

இந்த சிவில் சர்வீஸ் பணிகளில் கேடர் அல்லோகேஷன் என்பது மிக முக்கியமாகக் கருதப்படுவது. நல்ல ரேங்க் எடுத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அதைத் தாண்டி பொதுவாக முன்னணி ரேங்கில் இருப்பவர்கள் பஞ்சாப், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த கேடர் அல்லோகஷன் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.  

 

 

தற்போது அரசு கருத்தில் கொண்டிருக்கும் முறைப்படி, தேர்வில் வெற்றி பெற்று ரேங்கிங் எல்லாம் முடிந்த பிறகு ஃபவுண்டேஷன் கோர்ஸில் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு பின்புதான் பணியிடம் நியமிக்கப்படும். இதை பலரும் எதிர்க்கின்றனர். தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணி ரகசியமாக நடப்பது, மாணவர்கள் யார் என்ன எதுவும் தெரியாமல் நடத்தப்படும். அதனால் யாருக்கும் சார்பின்றி தேர்ச்சியாளர்களின் விபரங்கள் வெளிவரும். ஆனால் இந்த புதிய முறை அமலுக்கு வந்தால் பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்களின் கையில் முடிவுகள் செல்லும். அவர்கள் அவர்களுக்கு தேவையானவர்கள், பணபலம், செல்வாக்கு பலம் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் இதை துறை சார்ந்த பலரும் எதிர்க்கின்றனர்.

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.