Skip to main content

வந்துக்கிட்டே இருக்கும் ஃபோன்கால்..! திகைத்துப்போய் நிற்கும் தமிழக பா.ஜ.க.!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

bjp

 

திராவிட இயக்கங்களால்தான் தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியவில்லை என்பது மோடியின் ஆதங்கம். சமீப காலமாக திருக்குறளையும் தமிழின் பெருமையையும் பற்றி பல இடங்களிலும், தான் சுட்டிக்காட்டிப் பாராட்டியும் கூட, தமிழகத்தில் நாளுக்கு நாள் தனது இமேஜ் டேமேஜ் ஆவதால் அவரது எரிச்சல் அதிகமாகி உள்ளது.

 

இதுக்கு அ.தி.மு.க.வும் அனுசரணையாக இருப்பதாக மோடி ரொம்பவே கோபமடைந்து இருக்கிறாராம். போதாக்குறைக்கு செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள், திராவிடக் கட்சிகளை நம்பிதான் பா.ஜ.க. இருக்கிறது என்றும், கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்கும் என்றும் சொன்னதோட, மோடிக்கு இதெல்லாம் தெரியும் என்று நக்கலடிச்சதும் அவர் காதுவரை போய், அவரை சூடாக்கியிருக்கிறது. 

 

இதையெல்லாம் தமிழக பா.ஜ.க.வினரிடம் கோபமாகச் சுட்டிக்காட்டிய மோடி, அவர்களுக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட் ஒன்றையும் கொடுத்திருக்கிறாராம்.

 

தி.மு.க., அ.திமு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் மக்களுக்கு அறிமுகமான ஒரு பிரபலத்தை பா.ஜ.க.வுக்குக் கொண்டு வந்து, அவர்கள் வாயாலேயே அவர்கள் சார்ந்திருந்த திராவிடக்கட்சியை விமர்சிக்க வைக்கனும் என ஆசைப்படுகிறார். பா.ஜ.க.வின் தமிழகப் புள்ளிகளும் வலைவீச ஆரம்பிச்சிருக்காங்க.

 

தி.மு.க சைடில் டி.ஆர். பாலு மாட்டுவாருன்னு எதிர்பார்க்குறாங்களாம். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை துணை முதல்வர் ஓ.பி.எஸ். தங்களுக்கு தோதாக இருப்பார்னு நினைக்கிறாங்க. ஓ.பி.எஸ் மீது அ.தி.மு.க.வினருக்கும் அப்படியான ஒரு பார்வை இருக்குது.

 

இது எப்படி உடனடிச் சாத்தியம்னு தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் திகைக்க, எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நம்மை நம்பி வந்தார். அவருக்கு நாம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பதவி கொடுக்கலையா? அதுபோல் அவர்கள் வந்தால், நமது கேபினட் கூட இளகி இடம் கொடுக்கும்னும் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்காராம்.

 

Ad

 

இதனால் எப்படிப்பட்ட வலையை விரிப்பதுன்னு டீப் டிஸ்கஷனில் இருக்கு பா.ஜ.க. தரப்பு. இரண்டு திராவிட கட்சிகளிலிருந்தும் ஏதாவது ஒரு வி.ஐ.பி.யையாவது தூக்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டராம். கு.க.செல்வம் மாதிரி மக்களுக்கு தெரியாத ஆட்கள் வேணாம்னும் சொல்லப்பட்டிருக்கு. இது சம்பந்தமா டெல்லியில் இருந்து போன்கால் வந்துக்கிட்டே இருக்குதாம்.