இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்திலிருந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் பாகிஸ்தான் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரைக் காயப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோ மற்றும் அவருடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பேசும் வீடியோ ஆகியவை சமூக ஊடங்களில் வெளியாகியது.
இதைத்தொடர்ந்து இந்தியா அவரை ஒப்படைக்குமாறு எச்சரித்தது. உலக நாடுகள் பலவும் அதற்கு ஆதரவு அளித்தன. நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்வதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய எல்லைக்குள் வந்தடைந்துள்ளார். இதை இந்திய மக்கள் அனைவரும் இதை கொண்டாடி வருகின்றனர். வாகா எல்லை முழுவதும் மக்கள் கூட்டம் உற்சாகமாகக் கூடியுள்ளது.
அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் நடைபெறவிருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவர் குடும்பத்தையும், மக்களையும் சந்திக்க இருக்கிறார்.