சென்னையில் நேற்று (08/11/2022) நடைபெற்ற 'என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ், "இந்த ஃபங்ஷன் நடக்கறதுல கொஞ்சம் டவுட் இருந்துச்சு. ஏன்னா, கொஞ்சம் நிறைய இடைஞ்சல்லாம் வந்து புரொடியூசரும் நானும், பண்ண முடியுமா? முடியாதா? கண்கலங்கி உட்கார்ந்திட்டு இருந்தாரு புரொடியூசர். அப்ப எனக்கு டக்குனு மைண்டுக்கு வந்தது பண்ணணுமேனு அப்படினு சொல்லும் போது, விஜய் முரளிக்கு மட்டும் போன் அடிச்சேன். இந்த மாதிரி ஒரு ப்ராப்ளம். கொஞ்சம் கரெக்ட் பண்ணி எப்படியாவது உடனடியா ஃபங்ஷன பண்ணணும் அப்படினேன். அப்புறம் உடனே எல்லாருக்கும் போன் அடிச்சி, அப்புறம் டைமண்ட் பாபு கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசுங்கன்னு சொல்லி, அவருக்கும் நான் போன் பண்ணி பேசினேன்.
நான் வந்து அவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்ட காரணம் என்னனா, நம்ம தமிழ்நாட்டுல இருக்கோம். நம்மல நம்பி ஆந்திராவில இருந்து வந்து ஒரு புரொடியூசர் படம் எடுக்கும் போது, அவருக்கு நாம என்ன செய்யறோம் என்பது முக்கியம் இல்லையா. எவ்வளவு தூரம் கை கொடுத்து நாம அரவணைச்சு போகணும். அவர கஷ்டப்படுத்துறமே அப்படிங்கறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
நடிகை துளசி ரொம்ப பீல் பண்ணி பேசினாங்க. எனக்கு ரொம்ப அது டச்சிங்கா இருந்துச்சு. என்னனா, இந்த புரொடியூசர் எவ்வளவு கஷ்டப்பட்டு, பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த பணத்தை... விஷப்பரீட்சையான சமாச்சாரம். அதை அவரு செஞ்சிருக்கவே கூடாது. ஆனா தெரிஞ்சோ தெரியாமையோ அவர் ஏற்கனவே புரொடக்சஷன் மேனேஜர் வேலை பார்த்துருக்காரு. அவர் எப்படி, இப்படி ஏமாந்து, உள்ள வந்து கால வச்சாருனு எனக்கு புரியல. இரண்டு லாங்குவேஜ்ல படம் பண்ணிருக்காரு.
செம்பினு சொல்லிட்டு ஒரு படம். அந்த படம் ஆடியோ ஃபங்ஷனுக்கு போயிருந்தேன். ஃபர்ஸ்ட் ஷாட் போட்டதுமே கிளாப்ஸ் அடிச்சாங்க. ஏனா போட்டோகிராஃபி ஃபர்ஸ்ட் ஷாட்டு அவ்வளோ அழகா இருந்தது. இதிலும், அதே அளவு கைத்தட்டுற அளவுக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்ததுமே போட்டது. அந்த லொக்கேஷன் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஒரு பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பரவால, கேமராமேன், டைரக்டர் என்ன லைக் பண்றாங்களோ எடுக்கட்டும். அப்படினு சொல்லி என்ன செலவானாலும் பரவாலனு சொல்லி, கேரளா, அங்க, இங்கனு எல்லா இடத்துக்கும் சுத்தி இந்த படத்துக்காக அவரு வந்து செலவு பண்ணிருக்காரு.
நான் பெருசா இதுல ஒன்னும் பண்ணல. என்னை நடிக்கணும்னு சொன்னாங்க. சரி அப்படினு ஒத்துக்கிட்டு, இரண்டு நாள் தானே நடிக்கணும், அப்படினாங்க. ஒரு நாள் இங்க எடுத்தாங்க. ஒரு நாள் பாண்டிச்சேரி போய் எடுத்தாங்க. இப்ப நினைச்சு பார்க்கறேன் நானு. பாண்டிச்சேரில என்னோட சூட்டிங்கோட முடியுது. பூசணிக்காய் உடைக்கிறாங்க. நைட் இரண்டு, மூணு மணிக்கு வந்து படுத்து காலைல 11 மணிக்கு எழுந்திருக்கும் போது தான் நம்ம சின்னக்கலைவாணர் இறந்துட்டாருனு போன் வருது. அப்புறம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் எதோ புறப்பட்டேன்.
எதுக்கு சொல்ல வரேன்னா, அன்னையில் இருந்து படம் முடிஞ்சி போச்சு. இன்னைக்கும் வரைக்கும் பாருங்க. இவ்வளவு நாள் ஆயிருக்கு. இன்னைக்கு கரெக்ட்டா கிரகணத்துக்குள்ள வந்து மாட்டிருக்காரு. பரவால கிரகணம் 05.11 ஓட விலகிடுச்சி. உங்களுக்கும் கிரகணம் விலகுனதுனு சொல்லி நினைச்சிக்கலாம். துளசி அவ்வளவு தூரம் வார்ன் பண்ணி சொல்லியும் கூட அவர் அறியாமலே எப்படி எப்படியோ செலவ இழுத்துட்டு போயிருக்கு. இருந்தாக்கூட, அவர் எப்படியாவது கரையேறனும்னு சொல்லிட்டு படம் நல்லா வரணும் அப்படினு சொல்லிட்டு பிரார்த்திப்போம்.
ஆனால், அப்படி ஏதாவது கையக் கடிக்கிற மாதிரி ஏதாவது வந்தாக் கூட, அவங்க சொன்னாங்களே உங்க பொண்ணு கல்யாணம் நல்லா நடக்கணும்னு. அதுக்கு நாங்களெல்லாம் தமிழ்ல எதாவது பண்ணி உங்களுக்கு ஏதாவது பண்றோம். அதனால நீங்க நம்பிக்கையோடு இருக்கலாம்." என்றார்.