Skip to main content

“ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம்” - விஷ்ணு விஷால்

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
vishnu vishal speech at hotspot 2 trailer event

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்த இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்திருந்தனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்திருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தை விஷ்ணு விஷால் வழங்குகிறார். இரண்டாம் பாகத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ள நிலையில் கே.ஜே.பி. டாக்கிஸ், மற்றும் செவன் வாரியர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. இபப்ட அறிவிப்பு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். 

அதில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது, “ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி,  நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும்  நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் சார் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறையத் தைரியம் வேண்டும். அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார். இந்த புரோமோ ஷீட்டில் கூட மிக எளிமையாக இருந்தார்.  ஹாட் ஸ்பாட் 2 முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும், ப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம்” என்றார். 

விஷ்ணு விஷால் பேசியதாவது, “ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்னாடி பேசியவர்கள் கூறுகிறார்கள்... ஆனால் அப்படியில்லை, நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது  வந்தே தீரும். நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும். ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம், கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான், அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன், ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது. அப்போதே விக்னேஷை அழைத்து  பாராட்டினேன். இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. எனக்குக் கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும். இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி ஹாட் ஸ்பாட் 2. இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம். விஷ்ணு விஷால்  ஸ்டூடியோ மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்