Skip to main content

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் மேகா ஷெட்டி!

Published on 20/02/2025 | Edited on 20/02/2025
small screen actress megha shetty entry to big screen

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் மேகா ஷெட்டி. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.   

நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா'  ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான 'ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது. 

கன்னட சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் மேகா. தென்னிந்திய சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்கும் பொருட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார். "ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்