Skip to main content

விஜயின் பெரிய ப்ராஜெக்ட்டை இயக்கியவரின் அடுத்த படத்தில் விமல்!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
vimal

 

 

 

'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட்' படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் புதிய படம் 'தி புரோக்கர்'. இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. நாயகனாக விமல், நாயகியாக 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா, மற்றும் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா ,வினோத், தம்பி ராமையா, மயில்சாமி,உட்பட பல காமெடி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இது திருமணத்துக்குப்  பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப் பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் இப்படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை என படக்குழு அறிவித்துள்ளது. கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் உருவாகும் இப்படம் பூஜையுடன் தொடங்கி சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கிளாமரில் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்' - 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' இயக்குனர் விளக்கம் 

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
vimal

 

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் நாயகனாக விமல் மற்றும் நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கின்றனர். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார். கிளாமர் கலந்த ஹூயூமர் படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து சாதனை படைத்து வருகிறது. மேலும் இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் பேசியபோது....

 

 

 

"இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம். இந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது" என்றார்.

 

 

Next Story

'ஒண்ணுமே தெரியாமல் வந்தேன்...என்னை உருவாக்கினார்' - கண்ணீருடன் விமல்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
vimal

 

நவீன நாடகக்கலையின் முன்னோடியாக இருந்தவரும், சென்னை நவீன கூத்துப்பட்டறை நிறுவனருமான முத்துசாமி உடல்நலக்குறைவினால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82, தற்போது அவர் உடல்  சின்மயா நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரால் பயிற்றுவிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இவரது மாணவரும், நடிகருமான விமல் கூத்துப்பட்டறை முத்துசாமி உடனான நினைவுகளை நம்மிடம் பகிரும்போது... 

 

 

 

"இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் பல்வேறு நடிகர்கள் இவரிடம் இருந்து வந்தவர்கள் தான். அவர் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஐயா முத்துசாமி இன்னமும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நான் முதன்முதலில் 2002ஆம் ஆண்டு ஐயாவுடன் நடிப்பு கற்றுக்கொள்வதற்காக வந்து சேரும் பொழுது எனக்கு ஒன்றுமே தெரியாது. இவன் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டான் என்பவரை கூட மிகவும் அழகாக நடிப்பு சொல்லிக் கொடுத்து அவனை ஒரு நல்ல நடிகனாக மாற்றிவிடுவார். ஒரு கல்லைக் கூட நடிக்க வைத்து விடுவார். எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அதேசமயம் எந்த விளம்பரமும் இன்றி எல்லோரிடமும் சமமாகவும் பழகக்கூடியவர். ரொம்ப அழகாக நடிப்பை வாங்க கூடியவர். அவரை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்" என்றார்.