Published on 05/11/2018 | Edited on 05/11/2018
திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் 'அசுரகுரு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் மனோபாலா, யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ், நாகிநீடு, சுப்புராஜ், குமரவேல் ஆகியோர் நடிக்கின்றனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியியாகியுள்ளது