Skip to main content

"சுனாமி அடிச்சாலும் அந்த ஆளு சும்மாதான் இருப்பார் போல" - விஜய் சேதுபதி 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மார்வெல் நிறுவனத்தின் புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' விரைவில் வெளிவர இருக்கிறது.  விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வரும் 'அயர்ன் மேன்' பாத்திரத்துக்கு தமிழ்க் குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் டப்பிங் வடிவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் விஜய் சேதுபதி பேசியது...

 

vijay sethupathi avengers



"எனக்கு முதலில் 'அயர்ன் மேன்' பாத்திரத்துக்கு குரல் கொடுப்பது பயமாகத்தான் இருந்தது. இத்தனை நாளா வேற ஒரு குரலில் மக்கள் அவரை பார்த்திருக்காங்க. இப்போ திடீர்னு நாம பண்ணும்போது எப்படி இருக்குமோனு. எனக்கு 'அயர்ன் மேன்' பாத்திரம் ரொம்ப பிடிச்சிருந்தது. பிரச்சனைகளை அவரு ஹேண்டில் பண்ற விதம்... சுனாமி அடிச்சா கூட அந்த ஆளு சும்மாதான் இருப்பாரு போல. அதனால்தானே, அவர் பேர் அயர்ன் மேன்?

நான் நடிக்கிற படங்களிலும் சரி, இப்போ இந்தப் படத்திலும் சரி, எல்லா கேரக்டர்க்குள்ளயும் ஒரு டாட் ஒன்னு இருக்கும். அந்த புள்ளியை தொட்டுட்டா அவன் யார்னு தெரிஞ்சுரும். பழகுற விதம், நடக்குற விதம், அப்ரோச், இதுல தெரியும். நாம ஒரு பொருளை தொட்டா எப்படி நம்ம கைரேகை அதுல பதியுதோ, அந்த மாதிரி பழக்கவழக்கங்களில் குணம் வெளிப்படுதுன்னு நான் நம்புறேன். நான் பேசுறதுல எப்படி என் ஐடியாலஜி வெளிப்படுதோ அந்த மாதிரிதான் பாத்திரத்தின் வசனங்களில் அதன் குணம் வெளிப்படுது. அப்படித்தான் நான் கேரக்டரை ஸ்டடி பண்றேன்.


அயர்ன் மேன் மாதிரி நாம இருந்துவிட மாட்டோமானு தோணுச்சு. எந்தப் பிரச்சனையையும் தள்ளி வச்சு பாக்குறாரு. நாம மத்தவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா அட்வைஸ் பண்ணுவோம். ஆனா, நமக்கு அதே பிரச்சனைனா ஆடிப்போயிருவோம். அப்படியில்லாம அவரு டீல் பண்ணுற மாதிரி பண்ணனும்."    

 

 

    

சார்ந்த செய்திகள்