Skip to main content

"இப்போது என் அம்மா நிம்மதியாக தூங்குவார்" - விஜய் தேவரகொண்டா

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

vijay deverakonda, ananya pandey busy in liger promotions

 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லைகர்'. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

 

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு, "ஏற்கனவே இந்தியா முழுக்க இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அன்பைப் பெற்றது கடவுளின் ஆசீர்வாதமாக உணர்கிறேன். ஆனால் என் அம்மா எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று உணர்ந்து எங்களுக்கு சிறு பூஜை நடத்தினார். இப்போது நாங்கள் எங்களது ப்ரோமோஷன் பயணத்தைத் தொடரும்போது என் அம்மா நிம்மதியாக தூங்குவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

"ரூ.1 கோடி பரிசு ஓகே; எங்களுக்கு ரூ. 8 கோடி நஷ்டமே..." - அதிர்ச்சியில் விஜய் தேவரகொண்டா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

vijay devarakonda shocked about his movie  Distributors company post

 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 7 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் அண்மையில் நடத்தினர். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார். அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தின் விநியோக நிறுவனமான அபிஷேக் பிக்சர்ஸ், அவருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டியர் விஜய் தேவரகொண்டா. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் விநியோகம் செய்ததில் நாங்கள் ரூ. 8 கோடிகளை இழந்துள்ளோம். ஆனால் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.

 

இப்போது நீங்கள் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். தயவுசெய்து எங்களையும் எங்கள் விநியோகஸ்தர்கள் குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைக் கேட்டு விஜய் தேவரகொண்டா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.