விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் பேசியபோது... "மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, ஆனால் இதில் அரசியலில் மெர்சல் பண்ணிருக்கார் இயக்குனர் முருகதாஸ் சார். வெற்றிக்காக பலபேர் உழைக்கலாம், ஆனால் நாம வெற்றியே பெறக்கூடாது என்று ஒரு கூட்டம் உழைத்து கொண்டிருக்கிறது. இது யார் சொன்ன வரி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இதைதான் நான் என் வாழ்வில் கடைபிடித்து வருகிறேன். அது என்னவென்றால்... ''உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்ன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்கும்". உண்மையிலேயே ஜம்முனுதான் இருக்கு. கட்சி ஆரம்பிச்சு தேர்தல் நடத்தி ஓட்டு வாங்கி சர்க்கார் அமைப்பாங்க ஆனா நாங்க சர்க்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப்போறோம். முடிஞ்சா ஓட்டு போடுங்க. நான் படத்தை சொன்னேன். மேலும் விஜய் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கர் நடிகர் பிரசன்னா, நீங்கள் இந்த படத்தில் முதமைச்சர் ஆக நடிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம் என்ற கேள்விக்கு 'நான் முதலமைச்சராக இந்த படத்தில் நடிக்கவில்லை' என விஜய் பதிலளித்தார்.