![Vairamuthu greeting Yuvan Shankar Raja](http://image.nakkheeran.in/cdn/farfuture/v1F_UlMGjr2WL9yMSJJDOCUDQTRGMYeWtwr1nGXgKBc/1651927231/sites/default/files/inline-images/Untitled-5_8.jpg)
யுவன் ஷங்கர் ராஜா, 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். முக்கியமாக இவரது பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். 'துள்ளுவதோ இளமை', '7ஜி ரெயின்போ காலனி', 'பருத்திவீரன்', 'பையா' உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் ஃபுல் ஆல்பமே ஹிட் அடித்துள்ளது. இளைஞர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் இவர் சினிமா துறையில் தற்போது 25 ஆண்டுகள் கடந்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா வெள்ளிவிழா காண்பதை முன்னிட்டு திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், வைரமுத்து யுவன் ஷங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் "தம்பி யுவன், கலைத்துறையில் வெள்ளிவிழா என்பது எளிதல்ல. அது இன்பமான துன்பமானது. நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இளைஞர்களின் மூளைக்குள் உங்கள் இசை முகாமிட்டிருக்கிறது. இளம் தலைமுறை இன்னும் எதிர்பார்க்கிறது; ஈடுகட்டுங்கள்; சிகரத்தில் வீடுகட்டுங்கள் வாழ்த்துகிறேன்" என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
தம்பி யுவன்!
கலைத்துறையில்
வெள்ளிவிழா என்பது எளிதல்ல
அது
இன்பமான துன்பமானது
நீங்கள்
சாதித்திருக்கிறீர்கள்
இளைஞர்களின் மூளைக்குள்
உங்கள் இசை
முகாமிட்டிருக்கிறது
இளம் தலைமுறை
இன்னும் எதிர்பார்க்கிறது;
ஈடுகட்டுங்கள்;
சிகரத்தில் வீடுகட்டுங்கள்
வாழ்த்துகிறேன்.@thisisysr pic.twitter.com/5UmI1Oe8Pi— வைரமுத்து (@Vairamuthu) May 7, 2022