சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கலியாந்தூரில் ஐயனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் ஐந்து புரவிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
![vadivel](http://image.nakkheeran.in/cdn/farfuture/A3AIwvfbi19o_AaAYiBS5GD4IYaAQ1n9F7I54A7xhiE/1562155195/sites/default/files/inline-images/vadivel_5.jpg)
இவ்விழாவில் வைகை புயல் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அவர் பேசும்போது,“ஐயனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்.
கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்.
சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது” என வேதனை தெரிவித்தார்.