தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா கடந்த 2011ஆம் ஆண்டில் 89 லட்சம் ருபாய் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டி வரி செலுத்தியிருந்தார். இதையடுத்து திரிஷா காண்பித்த வருமான கணக்கை ஏற்காத வருமான வரித்துறை, திரிஷா அந்த ஆண்டில் மட்டும் 3.52 கோடி ருபாய் வருமானம் ஈட்டியதாக கூறி அவருக்கு 1.16 கோடி ருபாய் அபராதம் விதித்தது உத்தர விட்டது. இதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து திரிஷா நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது இந்த வழக்கு விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்யவதாக தீர்ப்பளித்தனர். மேலும் திரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு ஏற்கனவே கணக்கு காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.
Published on 15/06/2018 | Edited on 16/06/2018