பலரும் தங்களின் குழந்தை பருவத்தில் பெரும்பாலும் பார்த்து சிரித்த கார்டூன் என்றால் அது டாம் அண்ட் ஜெரியாக இருக்கும். உலகம் முழுவதும் டாம் அண்ட் ஜெரி என்ற கார்டூன் தொடருக்குப் பல தரப்பில் ரசிகர்கள் உண்டு.
![gene deitch](http://image.nakkheeran.in/cdn/farfuture/AQGkIog0ke-m_a2pfNw_mzBKTpR3hxnXO-tJeRkFqVQ/1587357096/sites/default/files/inline-images/Gene_Deitch.jpg)
இந்தக் கார்டூனை உருவாக்கி மற்றும் டாம் அண்ட் ஜெரி தொடரை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற இல்லுஸ்ட்ரேட்டர் ஜீன் தீச். அதேபோல மற்றோரு பிரபல கார்டூன் தொடரான ‘பாபாய் தி செய்லர் மேன்’ கார்டூன் தொடரில் சில எபிஸோட்களையும் இவர் இயக்கியுள்ளார்.
1924-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ஜீன், செக்கஸ்லோவாக்கியாவின் பிராக் நகருக்கு 1959-ம் ஆண்டு 10 நாட்கள் பணிக்காக சென்று, அங்கே ஒருவரின் மீது காதல் மலருந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
கடந்த 16-ம் தேதி எதிர்பாராதவிதமாக ஜீன் தீச், பிராக் நகரிலுள்ள தனது இல்லத்தில் மரணமடைந்துவிட்டார் என்று அவருடைய பப்ளிஷர் தெரிவித்துள்ளார். ஜீன் தீச்சுக்கு வயது 95.