உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடுகிறது. இதனால் பல நாடுகளில் மால், திரையரங்குகளை மூடி வைத்துள்ளனர்.
இந்தியாவிலும் கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் திரையரங்குகளும், மால்களும் மூடப்பட்டுள்ளன. லாக்டவுன் முடிந்தபின்னும் கரோனாவின் பாதிப்பு மிகவும் சொற்பமாகக் குறைந்த பின்பே திரையரங்குகளையும், மால்களையும் திறக்கத் திட்டமிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜப்பான் நாட்டிலுள்ள டோஹோ சினிமாஸ் என்கிற பிரபல திரையரங்கு நிறுவனம் குறைவான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வருகின்ற மே 15ஆம் தேதி திரயரங்குகளைத் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதேபோல ஏவோன் சினிமாஸ் என்கிற மற்றொரு நிறுவனம் மல்டிப்ளக்ஸ் திரயரங்குகளை வருகிற மே 18ஆம் தேதி திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.