ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘காதல் ஃபெயில்’ மற்றும் மூன்றாவது பாடலாக வெளியான ‘ஏடி’ பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.
இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இந்த திடீர் மாற்றம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.