மிருதன் படத்திற்கு பிறகு இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் "டிக் டிக் டிக்" இது இவர்கள் கூட்டணியில் வெளியாகும் இரண்டாவது திரைப்படமாகும். இந்த படத்தின் கதைக்களம் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது ஜூன் 22 ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.