தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஜெயம் ரவியை வைத்து ஜீனி, ஜூவாவை வைத்து ஒரு படம், நயன்தாரவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 என பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை நேற்று(07.10.2024) பிரம்மாண்டமாக கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. நடிகர் தனுஷ் இருவரும் சந்தித்து கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்து கைகுலுக்கி பேசிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் தற்போது குபேரா, இளையராஜா, ‘தேரே இஷ்க் மெய்ன்' உள்ளிட்ட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.