Skip to main content

"எங்க குடும்பம் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம்" - தம்பிராமையா 

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

"1970களில் ஒவ்வொரு ஊரிலும் மணியார் குடும்பம், கணக்குப்பிள்ளை குடும்பம் என்று பரம்பரை பரம்பரையாக பதவிவகித்து வந்த குடும்பங்கள் இருந்தன. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவையெல்லாம் நீக்கப்பட்டு அந்த முறை கைவிடப்பட்டது. அதுக்குப் பிறகும் இந்த குடும்பங்களைச் சேர்ந்த சிலர், மணியக்காரர் குடும்பத்து ஆள், கணக்குப்பிள்ளை குடும்பத்துப் பையன் என்று பெருமை பீத்திக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் இருக்கும் சொத்துகளை விற்றுத் தின்றே பிழைத்தார்கள்.

 

thambi ramaiah



மற்றவர்களெல்லாம் படித்து முன்னேறி வேறு வழியில் செல்ல இவர்களில் சிலரோ அந்தக் குடும்பப் பெருமையை சொல்லிக்கொண்டே வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு மணியக்காரர் குடும்பம்தான் எங்கள் குடும்பம். நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம். உமாபதியை வைத்து படமெடுப்பது என்று முடிவான பின்பு, வேறு கதைகளைத் தேடாமல் எங்கள் குடும்பத்துக் கதையையே மெருகேற்றி எடுத்தேன். இந்தப் படம், வாழ்ந்து கெட்டு மனமுடைந்து கிடக்கும் பல குடும்பங்களுக்கும் ஒரு உந்து சக்தியாக இருக்கும். நாமும் முன்னேறி பழைய நிலைக்கு வந்துவிடலாம் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும்" என்று நம்மிடம் தன் குடும்பக் கதையைப் பகிர்ந்துகொண்டார் தம்பி ராமையா.

 

 


இன்று (03-ஆகஸ்ட்-18) தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடித்திருக்கும் 'மணியார் குடும்பம்' திரைப்படம் வெளியாகியுள்ளது. அது குறித்து பேசும்போதுதான் உருக்கமாகக் கூறிய செய்தி இது.  




 

 

சார்ந்த செய்திகள்