Skip to main content

" ‘தளபதி 63’ டப்பிங்கிற்கு ரெடி"- விஜய்யின் மகன் சஞ்சய் தளபதி 63ல் நடித்திருக்கிறாரா?

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாகும். 
 

sanjay

 

 

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள், ஆர் ஆர் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஐந்தாம் தேதி பதிவு செய்த ஒரு ட்விட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இந்நிலையில் விஜய் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்திற்கு பெயர் பிகில் என்றெல்லம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனுடன் தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அது என்ன என்றால் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இது இவரை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டுள்ளார் . அதற்கு விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய்தான் அது என்று ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கின்றனர். மேலும் ஜேஸன் சஞ்சய் அந்த வீடியோவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஜேஸன் சஞ்சய், தளபதி 63 படத்திற்கான டப்பிங்கிற்கு தயாரிகிவிட்டேன் என்ற வகையில் ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜேஸன் சஞ்சய் படத்தில் நடித்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்