Skip to main content

"மாநாடு ட்ராப் இல்லை..."-  சுரேஷ் காமாட்சி விளக்கம்!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
suresh kamatchi

 

 

சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

 

தொடக்கத்திலிருந்தே பல தடைகளை கடந்து ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், கரோனா அச்சுறுத்தலால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருப்பதால் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக வதந்தி பரவி வருகிறது. 

 

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்து உள்ளார். அதில், "நான் பொதுவாக மீடியாவை மதிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் இதுபோன்ற பொய்யான செய்தி வருத்தப்பட வைக்கின்றது. இதுபோன்ற அறிக்கையை நானோ, இயக்குனரோ வெளியிடவே இல்லை. தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் தயாரிப்பாளர்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடுங்கள் ‘மாநாடு’ ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற வேலையை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்