Skip to main content

சொகுசு காரில் ரைட் போன சூப்பர் ஸ்டார்!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

rajnikant


கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குத் துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. சினிமா ஷூட்டிங்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. சினிமா இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லம்போகினி' என்னும் சொகுசு காரை தானே ஓட்டுவதுபோன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்தப் புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி. உலகிலேயே அதிக விலைகொண்ட பிரத்யேக சொகுசு கார் வரிசைகளில் ஒன்றுதான் லம்போகினி. 

 

சார்ந்த செய்திகள்