செக்கச்சிவந்த வானம், 96 உட்பட அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட, சாயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை 'ஆரண்யகாண்டம்' பட இயக்குனர் தியாகராஜா குமார ராஜா இயக்கியுள்ளார். மேலும் நாயகியாக சமந்தா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்ட் வெஸ்ட் டிரீம் ஒர்க்ஸ் மற்றும் ஆல்கெமி விஷன் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதையை தியாகராஜா குமார ராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் இணைந்து தயாரித்துள்ளனர்.