கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சுந்தர் சி -க்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, மருத்துவமனை ஒன்றில் தங்கி அவர் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது, சுந்தர் சி கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நண்பர்களே உங்கள் பிரார்த்தனைக்கு விடை கிடைத்துவிட்டது. என்னுடைய கணவர் சுந்தர் சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் எங்களது மற்றொரு வீட்டில் அடுத்த 7 நாட்களுக்கு தனிமையில் இருப்பார். அதனால், 7 நாட்கள் கழித்தே அவரை நான் பார்க்க முடியும். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Friends all your prayers have been answered. My hubby #SundarC is out of the hospital. But he will be in isolation for next 7 days. He is staying at our guest house, so I get to see him only after 7 days. Thank you to each one of you for your support n best wishes #Love 🙏❤🙏❤
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 14, 2021