Published on 22/02/2020 | Edited on 22/02/2020
உலகப்புகழ்பெற்ற சினிமா இயக்குனரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தத்து மகள் பார்ன் ஸ்டாராக நடிப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
டுயல், ஈ.டி, இண்டியான ஜோன்ஸ் தொடர், ஜுராஸிக் பார்க் தொடர், ஜாஸ் என எண்ணற்ற பல உலகம் வியக்கும் படைப்புகளை கொடுத்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். தற்போது அவருடைய 23 வயது மகள் மிக்கலே ஆபாச படங்களில் நடித்து, அதை தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுவே தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு தனது தந்தையும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையிலேயே மிக்கலேவை ஸ்பீல்பெர்க்கும் அவருடைய மனைவி கேட் கேப்சாவ் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். சுகர் ஸ்டார் என்று தனக்கு திரை பெயர் வைத்திருக்கிறார்.