Skip to main content

சிறப்பு காட்சியுடன் தமிழகத்தில் வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
ram charan game changer get special permission in tamilnadu

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு நாளை ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்துக்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை மட்டும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சி திரையிட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.      

சார்ந்த செய்திகள்