லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் நயன்தாரா. அதேபோல ஜோதிகாவும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து தற்போது தமன்னாவும் பெட்ரோமாக்ஸ் என்னும் படத்தின் மூலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க கதை கேட்டு அந்தார். இப்போது அப்படி இரு கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இது பேய் கதையுடன் திகில் கலந்த படமாக உருவாகுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.

தற்போது ஹன்சிகா நடிக்க இருப்பதாக உள்ள படத்தை ஹரி அண்ட் ஹரிஸ் இயக்க இருக்கின்றனர். இவர்கள் அம்புலி, அ, ஜம்புலிங்கம் ஆகிய படங்களை எடுத்தவர்கள்.

இப்படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே இரண்டு இந்தி படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கிறார். ஹன்சிகா கமிட்டாகியிருப்பதாக சொல்லப்படும் தமிழ் படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்க ஒப்பந்தமாகினார் என்றால் தமிழ் படல் உலகில் அறிமுகமாகிறார்.