
கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கி வருகிறார். இப்படத்தை 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. கதாநாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. கோடைக்கு படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் சென்ற வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தன்று ட்ரைலர் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூரிக்கும் ஐஸ்வர்யா லெட்சுமிக்கும் கல்யாணம் நடக்க அதில் மணமேடையில் ஒரு சிறுவன் மணமக்களுக்கு நடுவில் உட்கார்ந்து தாளியை கையில் வைத்திருக்கும் படி போஸ்டர் அமைந்துள்ளது. கோடையில் படம் வெளியாகவுள்ளதாக தெரிவித்த படக்குழு ட்ரைலரில் ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.