Published on 16/02/2021 | Edited on 16/02/2021
![sj surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/z7GWeRdIn1n2TViALzytH-BLh5kNY9l4H0Ry0f0zsVU/1613472407/sites/default/files/inline-images/71_24.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே. புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த 11-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா படக்குழுவினரோடு இணைந்துள்ளார்.
படப்பிடிப்பில் இணைந்தது குறித்து எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், 'முதல்நாள் படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுபவித்தேன். நல்ல தொடக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.