'மான்ஸ்டர்' வெற்றிப் படத்திற்கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், இன்று நவம்பர் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்து எஸ்.ஜே சூர்யா பேசும்போது...

''இன்று எனது அடுத்த பயணம். நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில், பிரியா பவானி சங்கர் இணைய, யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்'' என்றார். எஸ்.ஜே. சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.